News April 3, 2024
நாமக்கல்: 3 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு இல்லை

நாமக்கல் மாவட்டத்தில் இன்று(ஏப்.3) முதல் அடுத்த மூன்று நாட்கள் வானம் லேசான மேகமூட்டத்துடன் காணப்படும், மழை பெய்ய வாய்ப்பு இல்லை, வெப்பநிலையை பொறுத்தவரையில் அதிகபட்சமாக 102.2 டிகிரியாகவும், குறைந்தபட்சமாக 77 டிகிரியாகவும் இருக்கும், காற்று மணிக்கு முறையே 8 கீ.மீ முதல்10 கீ.மீ., வேகத்தில் தென் கிழக்கு திசையில் இருந்து வீசும் என கால்நடை மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம் தெரிவித்துள்ளது.
Similar News
News July 5, 2025
நாமக்கல்லின் அடையாளமான ஜோதி தியேட்டர்

ஒவ்வொரு ஊர் மக்களின் சந்தோஷம், துக்கம், கொண்டாட்டம் என அனைத்து உணர்ச்சிகளையும் தாங்கி நிற்பவை அங்குள்ள திரையரங்கங்கள். அந்த வகையில், ஜோதி தியேட்டர் சுமார் 71 ஆண்டுகளாக 70 அடி உயரத்தில் நாமக்கல்லின் அடையாளமாகத் திகழ்ந்து சில ஆண்டுகளுக்கு முன் இடிக்கப்பட்டது. என்.எஸ்.கே காலம் முதல் அஜித் – விஜய் காலம் வரை பல தலைமுறைகளைக் கடந்த இந்தத் தியேட்டரில் உங்களது நினைவுகளை கமெண்ட் பண்ணுங்க!(SHARE IT)
News July 5, 2025
பள்ளி, கல்லூரி கட்டடங்கள் அனுமதி பெற விண்ணப்பிக்கலாம்

நாமக்கல் மாவட்டத்தில் அனுமதியின்றி கட்டப்பட்டுள்ள பள்ளி மற்றும் கல்லூரி கட்டடங்கள் அனுமதி பெற ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம். மேலும் இத்திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்க விருப்பமுள்ளவர்கள் https://www.tcponline.tn.gov.in என்ற இணையதள முகவரியில் விண்ணப்பம் பதிவு செய்யலாம் என நாமக்கல் மாவட்ட ஆட்சியர் துர்கா மூர்த்தி தெரிவித்துள்ளார்.
News July 5, 2025
நாமக்கலில் தனியார் வேலைவாய்ப்பு முகாம்

நாமக்கல்: மல்லசமுத்திரத்தில் உள்ள மகேந்திரா இன்ஜினியரிங் கல்லூரியில் இன்று (ஜூலை 5) மாபெரும் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது. இதில், 150க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் பங்கேற்கின்றன. 10ஆம் வகுப்பு முதல் பட்டதாரிகள் வரை பங்கேற்கலாம். நேரடி நியமனம் நடைபெறும்.