News April 6, 2025

நடிகர் ‘சஹானா’ ஸ்ரீதர் மறைவு: திரைப்பிரபலங்கள் அஞ்சலி

image

நேற்று மாலை மாரடைப்பால் உயிரிழந்த நடிகர் ஸ்ரீதர் உடல் சென்னை தி.நகரில் உள்ள அவரது இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. இயக்குநர் சிகரம் பாலச்சந்தர் இயக்கிய ‘சஹானா’ சீரியல் மூலம் அறிமுகமான இவர் ஏராளமான சீரியல்களில் வில்லன், அப்பா, குணச்சித்திர வேடங்களில் நடித்து ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர். ‘வள்ளியின் வேலன்’ சீரியல் படக்குழு, நடிகர், நடிகைகள் கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினர்.

Similar News

News April 9, 2025

நீட் விலக்கு பெறும் நம்பிக்கை வந்திருக்கிறது: முதல்வர்

image

மாணவர்களின் மருத்துவக் கனவை நீட் சிதைப்பதாக முதல்வர் ஸ்டாலின் பேசியுள்ளார். அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் பேசிய அவர், நீட் விலக்கு மசோதா விவகாரத்தில் ஆளுநர் அரசியல் செய்ததாகத் தெரிவித்துள்ளார். ஆனால், ஆளுநரின் அதிகாரம் தொடர்பான உச்சநீதிமன்றத் தீர்ப்புக்குப் பின் நீட் தேர்வில் இருந்து விலக்கு பெற முடியும் என்ற நம்பிக்கை பிறந்திருப்பதாக ஸ்டாலின் கூறியுள்ளார்.

News April 9, 2025

நடிகை மலைகா அரோராவுக்கு வாரண்டு

image

இந்தி நடிகை மலைகா அரோராக்கு மும்பை கோர்ட் வாரண்டு உத்தரவு பிறப்பித்துள்ளது. 2012ல் ஹோட்டலில் வைத்து தெ.ஆப்பிரிக்க நபரை தாக்கியதாக சயிப் அலிகான் உள்ளிட்டோர் மீது வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது. இதில் அரோராவும் சாட்சியாக சேர்க்கப்பட்டு உள்ளார். இந்த வழக்கு விசாரணையில் மலைகா அரோரா நேரில் ஆஜராகவில்லை. இதையடுத்து பிணையில் வரக்கூடிய வாரண்ட் உத்தரவை மும்பை கோர்ட் பிறப்பித்தது.

News April 9, 2025

லோன் வாங்கியோருக்கு ஹேப்பி நியூஸ்

image

வங்கிகளின் குறுகிய கால கடனுக்கான ரெப்போ வட்டி விகிதத்தை 0.25% குறைத்துள்ளது ரிசர்வ் வங்கி. இதன்படி இனி ரெப்போ வட்டி 6 சதவீதமாக இருக்கும். இதனால், வாடிக்கையாளர்களுக்கு வழங்கும் கடனுக்கான வட்டியை வங்கிகள் குறைக்கும். அப்படி செய்தால், புதிய கடன்களுக்கான வட்டி குறையும். மேலும், ஏற்கெனவே வாங்கியுள்ள வீட்டுக்கடன் உள்பட வங்கிக் கடன்களின் வட்டியும் (EMIயும்) குறைய வாய்ப்புள்ளது. வங்கிகள் இதை செய்யுமா?

error: Content is protected !!