News April 6, 2025
FOCUSஐ திருப்பும் RSS!

வக்பு வாரிய திருத்த மசோதா சட்டமாகவுள்ள நிலையில், கத்தோலிக்க சர்ச்சுகளின் நிலத்தின் மீது RSS கவனத்தை திருப்பி இருக்கிறது. அதன் அதிகாரப்பூர்வ இணையமான ஆர்கனைசரில், அதிக நிலம் யாரிடம் உள்ளது? கத்தோலிக்க சர்ச்சிடமா இல்லை வக்பு வாரியத்திடமா?’ என்ற பெயரில் கட்டுரை வெளியாகி இருக்கிறது. அதில், கத்தோலிக்க அமைப்புகளிடம் 7 கோடி ஹெக்டேர் அளவுக்கு நிலங்கள் இருப்பதாக விவரிக்கப்பட்டுள்ளது.
Similar News
News April 18, 2025
2 குழந்தைகளை தலை, கழுத்தில் வெட்டி கொன்ற தாயார்!

தெலங்கானாவில் நிகழ்ந்த இந்த சம்பவம் மனதை உலுக்குகிறது. தேஜஸ்வி என்பவரின் 2 குழந்தைகளுக்கும் சுவாச பிரச்னை இருந்துள்ளது. இதனால் அவர்களுக்கு, 4 மணிநேரத்திற்கு ஒரு முறை மருந்து கொடுக்க வேண்டும். ஆனால், கணவரோ டெய்லி சண்டை போட, அவர் டிப்ரஷனில் இருந்துள்ளார். ஒரு கட்டத்தில் நிதானம் இழந்து தேஜஸ்வி, குழந்தைகளின் தலை, கழுத்தில் கத்தியால் வெட்டி கொன்றுள்ளார். பின்னர் தானும் தற்கொலை செய்துக் கொண்டுள்ளார்.
News April 18, 2025
நாயால் வந்த ED ரெய்டு!

பெங்களூரை சேர்ந்த சதீஷ் ₹50 கோடிக்கு ஓநாய் இன கேடாபாம்ப் ஒகாமி நாய் வாங்கியதா சோஷியல் மீடியாவுல பதிவிட்டாரே ஞாபகமிருக்கா? நெட்டிசன்கள் கூட அவர தூக்கி வெச்சு கொண்டாடுனாங்க. ஆனா, இதுல தான் ட்விஸ்ட். அது ஓநாய் இன நாயே இல்லையாம். பக்கத்து வீட்டுல வளர்ற இந்திய இன நாயாம். விலை கூட ஒரு லட்சமாம். ED அவரு வீட்டுக்கு போயி கிடுக்கிப்பிடி போட்டதுல சதீஷ் சரண்டரானாரு. எதுக்கு இந்த பெருமை?
News April 18, 2025
அழவில்லை; உரிமையை கேட்கிறோம்: CM பதிலடி

நாங்கள் அழவில்லை; உரிமையை தான் கேட்கிறோம் என PM மோடிக்கு CM ஸ்டாலின் பதிலளித்துள்ளார். பாம்பன் திறப்பு விழாவில் பங்கேற்ற PM மோடி நிதி தரவில்லை என்பதற்காக சிலர் அழுகிறார்கள் என விமர்சித்திருந்தார். இதற்கு பதில் அளித்த ஸ்டாலின், மத்திய அரசிடம் கையேந்த மாநில அரசுகள் பிச்சைக்காரர்களா என குஜராத் CM ஆக இருந்தபோது PM கேட்டதை சுட்டிக்காட்டினார். நீங்கள் கேட்டால் சரி; நாங்கள் கேட்டால் தவறா? என்றார்.