News April 6, 2025

போட்டோகிராபர் மயங்கி விழுந்து பலி

image

வேலூர் தோட்டப்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் ஆதிமூலம் (57). போட்டோகிராபரான இவர், வேலுார் தென்னைமர தெருவில் நேற்று முன்தினம் (ஏப்ரல் 4) நடந்து சென்றபோது திடீரென மயங்கி விழுந்துள்ளார். அப்பகுதி மக்கள் அவரை மீட்டு வேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கெனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து தெற்கு போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

Similar News

News April 10, 2025

ரயிலில் தலையை வைத்து இருவர் தற்கொலை

image

காட்பாடி – லத்தேரி இடையே உள்ள ரயில் தண்டவாளத்தில், இன்று (ஏப்ரல் 10) அதிகாலை ஆண் – பெண் இருவர் தற்கொலை செய்து கொண்டனர். ரயில் தண்டவாளத்தில் தலையை வைத்த இருவர் மீதும், சென்னையில் இருந்து ஜோலார்பேட்டை நோக்கி செல்லும் ரயில் ஏறி இறங்கியது. இதுகுறித்து தகவல் அறிந்த ஜோலார்பேட்டை ரயில்வே போலிசார், உயிரிழந்தவர்கள் யார்? எந்த ஊரைச் சேர்ந்தவர்கள்? எதற்காக தற்கொலை செய்து கொண்டனர்? என விசாரித்து வருகின்றனர்.

News April 10, 2025

வேலூர் மாவட்டத்தில் 100+ டிகிரி பாரன்ஹீட் வெயில் 

image

தமிழகத்தில் வட மற்றும் உள் மாவட்டங்களில் அடுத்து வரும் நாட்களில் வெப்பநிலை அதிகரித்து காணப்படும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. அதன்படி, நேற்று (ஏப்ரல் 9) வேலூர் மாவட்டத்தில் இந்த ஆண்டின் அதிகபட்ச வெயிலாக 101.3°F டிகிரி பாரன்ஹீட் வெயில் பதிவாகியுள்ளது. மேலும், பகல் நேரத்தில் பல இடங்களில் கடுமையான அனல் காற்று வீசியது. இதனால் பொதுமக்கள் கடும் அவதி அடைந்ததோடு, வீடுகளிலேயே முடங்கினர்.

News April 10, 2025

வேலூர் ஆட்சியரின் முக்கிய அறிவிப்பு

image

தமிழகத்தில் இன்று (ஏப்ரல் 10) முதல் வரும் 14ஆம் தேதி வரை வடமாவட்டங்களில் 40°C முதல் 42°C வரை வெப்பத்தின் தாக்கம் இருக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. எனவே, வேலூர் மாவட்டத்தில் உள்ள பொதுமக்கள் அத்தியாவசிய பணிகளை தவிர்த்து வெளியில் செல்வதை தவிர்க்க வேண்டும். முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பின்பற்றி பாதுகாப்பாக இருக்க வேண்டும் என கலெக்டர் சுப்புலட்சுமி தெரிவித்துள்ளார். ஷேர் பண்ணுங்க

error: Content is protected !!