News April 6, 2025
சிக்கன் வாங்க கிளம்பிட்டீங்களா?

வார விடுமுறை நாளான இன்று (ஞாயிறு) சிக்கன் கடைகளில் பொதுமக்களின் கூட்டம் அலைமோதுகிறது. கொள்முதல் பண்ணைகளில் கறிக்கோழி கிலோ (உயிருடன்) ₹87ஆக இருந்த நிலையில் இன்று ₹130க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல், தோல் நீக்கிய கறிக்கோழி விலை ஒரு கிலோ ₹200க்கும் விற்பனையாகிறது. இதன் காரணமாக, மாநிலம் முழுவதும் சிக்கன் விலை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Similar News
News April 9, 2025
அரசியலுக்கு அப்பாற்பட்டவர் குமரி அனந்தன்

மறைந்த EX எம்பி குமரி அனந்தன் காங்கிரஸ் முன்னாள் மாநில தலைவராவார். அவரின் மகள் தமிழிசை செளந்தரராஜன் பாஜகவை சேர்ந்தவர். எனினும் குமரி அனந்தன் அரசியலுக்கு அப்பாற்பட்ட முகமாகவே அனைவராலும் பார்க்கப்பட்டார். காங்கிரஸ், பாஜக, திமுக, அதிமுக என அனைத்து கட்சியினராலும் மதிக்கப்பட்டார். குமரி அனந்தனின் உடலுக்கு கட்சி பாகுபாடில்லாமல் அஞ்சலி செலுத்திய தலைவர்களை பார்த்தாலே இதை அறிய முடியும்.
News April 9, 2025
இந்தியாவிற்கு அழைத்து வரப்படும் தீவிரவாதி

2008 மும்பை தீவிரவாதி தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட தஹாவூர் ராணா, இன்று இரவு அல்லது நாளை காலை இந்தியாவிற்கு கொண்டுவரப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நாடு கடத்துவதற்கு தடை கோரிய ராணாவின் மனுவை அமெரிக்க உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்த நிலையில், சிறப்பு விமானம் மூலம் அவர் இந்தியாவிற்கு அழைத்துவரப்பட உள்ளார். மும்பையில் லஷ்கர்- இ- தொய்பா தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 175 பேர் கொல்லப்பட்டனர்.
News April 9, 2025
உச்சமடையும் வர்த்தக போர்: சீனாவின் அதிரடி பதிலடி

அமெரிக்க இறக்குமதி பொருள்களுக்கு சீனா 84% வரிவிதித்துள்ளது. இந்த புதிய வரிவிதிப்பு நாளை முதல் அமலுக்கு வரும் எனவும் சீனா தெரிவித்துள்ளது. சீன இறக்குமதி பொருள்களுக்கு டிரம்ப் 104% வரிவிதித்த மறுநாள், சீனா இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. முன்னதாக சீனா 34% வரிவிதித்திருந்தது. உலகின் 2 பெரிய பொருளாதார நாடுகளுக்கு இடையேயான வர்த்தக போர் தற்போது உச்சநிலையை அடைந்துள்ளது.