News April 6, 2025
வாட்ச் மேனுக்கு இவ்வளவு வருமானமா? எப்படி?

உத்தரப் பிரதேசத்தின் அலிகர் மாவட்டத்தில் வாட்ச் மேனாக பணியாற்றும் ராஜ்குமார் என்பவருக்கு ₹2.2கோடி வருமான வரி நிலுவையில் உள்ளதாக அதிகாரிகள் நோட்டீஸ் அனுப்பினர். மாதம் ₹5,000 மட்டுமே ஊதியம் பெறும் அவர் இதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். அவரது PAN எண்ணை வைத்து பல கோடிக்கு மோசடி நடைபெற்றுள்ளதாக காவல்துறை தெரிவித்தது. எளிய மனிதர்களின் ஆதார், PAN-ஐ வைத்து நடக்கும் மோசடிகள் அதிகரித்துள்ளன.
Similar News
News April 9, 2025
நாளை டாஸ்மாக் கடைகள் இயங்காது

மகாவீர் ஜெயந்தியை முன்னிட்டு, நாளை டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, இன்று இரவு 10 மணி முதல் 11ஆம் தேதி நண்பகல் 12 மணி வரை டாஸ்மாக் கடைகள் இயங்காது. மேலும், மதுக்கடைகளுடன் இணைந்துள்ள பார்கள், லைசென்ஸ் பெற்ற பார்கள், ஹோட்டல்களில் இயங்கும் பார்கள் அனைத்தும் நாளை மூடப்பட வேண்டும். மீறினால் கடும் நடவடிக்கை பாயும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
News April 9, 2025
மாணவி பாலியல் கொடுமை: ஆசிரியருக்கு 187 ஆண்டு சிறை

கேரளாவில் மாணவியை 2 ஆண்டுகளாக பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் மதரஸா ஆசிரியருக்கு 187 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து கோர்ட் தீர்ப்பளித்துள்ளது. உதயகிரியை சேர்ந்த முகமது ரபி, கொரோனா ஊரடங்கில் மாணவியை 14 வயது முதல் 2 ஆண்டுகளாக வன்கொடுமை செய்ததாக போக்சோவில் கைது செய்யப்பட்டார். ஏற்கெனவே இதே சட்டத்தில் கைது ஆனவர் என்பதால், அதை சுட்டிக்காட்டி அவருக்கு கோர்ட் அதிக தண்டனை விதித்தது.
News April 9, 2025
30 வயதை தாண்டிய ஆண்களுக்கு…

விறகு வெட்டும்போது, உடல் தசைகளுக்கு அதிக ரத்தவோட்டம் செல்வதால், டெஸ்டோஸ்டீரான் ஹார்மோன் அளவு உயருவதை விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். இதிலென்ன செய்தி என்கிறீர்களா? ஆண்களுக்கு 30- 40 வயதில் ஆண் தன்மைக்கு காரணமாக டெஸ்டோஸ்டீரான் ஹார்மோன் குறைய தொடங்கும். இதனால் உடலுறவு செயல்பாடு, உடல் வலு குறையத் தொடங்கும். இதை தடுக்க எடை தூக்குதல் உள்ளிட்ட <<15206993>>சில வழிமுறைகளை<<>> பின்பற்ற ஆலோசனை தருகின்றனர்.