News April 6, 2025
ராம நவமி: கொல்கத்தாவில் போலீசார் குவிப்பு!

மே.வங்கத்தில் ஸ்ரீராம நவமியை முன்னிட்டு 2,000க்கும் மேற்பட்ட பேரணிகள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. கொல்கத்தாவில் மட்டும் 50 பேரணிகள் நடத்தப்படவுள்ளன. இதனால் பேரணி நடக்கும் இடங்களில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். அசம்பாவிதங்களை தடுக்க இந்து அமைப்புகளுக்கு அரசு சில கட்டுப்பாடுகளையும் விதித்துள்ளது. பேரணியில் எவ்வித ஆயுதங்களையும் ஏந்தி செல்லக்கூடாது என நீதிமன்றமும் அறிவுறுத்தியுள்ளது.
Similar News
News September 17, 2025
சினிமா ரவுண்டப்: அருண் விஜய் படத்தில் தனுஷ்

*தனுஷின் ‘இட்லி கடை’ படத்தின் மூன்றாவது பாடல் இன்று வெளியீடு
* ‘ரெட்ட தல’ படத்தில் தனுஷ் பாடியுள்ள பர்ஸ்ட் சிங்கிள் புரோமோ வெளியீடு
*விஜய் ஆண்டனியின் சக்தி திருமகன் படத்தின் ஸ்னீக் பிக் இன்று வெளியாகிறது
* நேற்று வெளியான பைசன் படத்தின் 2-வது பாடலான ‘றெக்க’ ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
News September 17, 2025
காலையில் ஒரு கிளாஸ் இந்த மூலிகை தேநீர் குடிங்க!

வெந்தய விதை தேநீர் ரத்த சர்க்கரையை கட்டுப்படுத்த, கெட்ட கொழுப்பைக் குறைக்க, மாதவிடாய் வலியைப் போக்க உதவும் என சித்த மருத்துவர்கள் கூறுகின்றனர் *வெந்தய விதைகளை நசுக்கி, கொதிக்கும் நீரில் சேர்த்து கொள்ளவும். மிதமான சூட்டில், 3- 5 நிமிடங்கள் இதனை கொதிக்க விடவும். இந்த நீரை வடிகட்டி, தேன் சேர்த்துக் கொண்டால், சூடான ஹெல்தியான வெந்தய விதை தேநீர் ரெடி. நண்பர்களுக்கு பகிரவும்.
News September 17, 2025
மோடி என்னும் புயல்!

எளிமையான குடும்பத்தில் பிறந்து, உலக அரங்கில் பெரும் தலைவராக உருவெடுத்துள்ள PM மோடிக்கு இன்று பிறந்தநாள். விமர்சனங்கள் இருப்பினும், தொடர்ந்து 3-வது முறையாக மக்களின் நம்பிக்கையை பெற்று தனிபெரும் ஆளுமையாக இருக்கிறார். நாட்டு வளர்ச்சி, மக்கள் நலத்திட்டங்கள் என பலவற்றிலும் அவரின் ஆட்சியில் பலர் பலனடைந்து கொண்டுதான் இருக்கின்றனர். நீங்க PM மோடியின் ஆட்சியில் பயன்பெற்ற ஒரு திட்டத்தை குறிப்பிடுங்க?