News April 6, 2025
கம்பத்தில் வீடுகள் இடிந்து தரைமட்டம்

கம்பம் பகுதியில் நேற்று மாலை சுமார் 3 மணிநேரத்திற்கும் மேலாக இடைவிடாத மழை கொட்டித் தீர்த்தது. இதனால் பெருக்கெடுத்து ஓடிய தண்ணீர் கம்பம் ஆதிசக்தி விநாயகர் கோவில் தெருவுக்குள் சூழ்ந்தது. இதையடுத்து அப்பகுதியில் இருந்த அடுத்தடுத்த 5 வீடுகள் இடிந்து தரைமட்டமானது. அப்போது வீட்டிற்குள் யாரும் இல்லாததால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.தெரிந்தவர்களுக்கு SHARE செய்து பாதுகாப்பாக இருக்க சொல்லுங்க.
Similar News
News December 26, 2025
தேனியில் புகையிலை பதுக்கிய பெண் கைது!

போடி நகா் காவல் நிலைய போலீசார் நேற்று ரோந்துப் பணியில் ஈடுபட்டனா். அப்போது போடி கீழத்தெரு முனியாண்டி மனைவி லட்சுமி (34), அதே பகுதியை சேர்ந்த சூா்யா நகர் நாகராஜ் (34) ஆகியோா் புகையிலைப் பொருள்களை பதுக்கி வைத்து விற்பனை செய்தது தெரியவந்தது. இதுகுறித்து போடி போலீசார் வழக்குப்பதிந்து இவா்களிடமிருந்து ரூ.10,000 மதிப்புள்ள புகையிலை பொருட்களை பறிமுதல் செய்து இருவரையும் கைது செய்தனா்.
News December 26, 2025
தேனி: டிகிரி போதும்., கூட்டுறவு வங்கியில் ரூ.96,210 சம்பளம்!

தேனி மக்களே, தமிழ்நாடு மாநில தலைமை கூட்டுறவு வங்கியில் காலியாக உள்ள 50 உதவியாளர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளன. 18 – 32 வயதுகுட்பட்ட ஏதாவது ஒரு டிகிரி, B.E/B.Tech முடித்தவர்கள் டிச.31க்குள் தகுதியுடைய நபர்கள் இங்கு <
News December 26, 2025
தேனி மக்களே இதான் கடைசி… கலெக்டரின் முக்கிய அறிவிப்பு.!

தேனி மாவட்டத்தில் SIR பணி நிறைவுபெற்று வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. வரைவு வாக்காளர் பட்டியலில் இடம்பெறாத வாக்களார்கள் பெயர் சேர்க்கை, நீக்கம், திருத்தம், மேற்கொள்ள நாளை 27ம் தேதி, நாளை மறுநாள் 28ம் தேதி மற்றும் ஜனவரி 3,4 தேதிகளிலும் சம்பந்தபட்ட வாக்குசாவடிகளில் சிறப்பு முகாம் நடைபெறும். தற்போது வௌியாகியுள்ள பட்டியலில் உங்க பெயர் உள்ளதா என்று <


