News April 6, 2025
ட்ரம்புக்கு சிக்கல்.. US-ல் வெடித்த போராட்டம்

ட்ரம்பை கண்டித்து ஆயிரக்கணக்கானோர் US-ன் பல்வேறு நகரங்களில் போராட்டத்தில் ஈடுபட்டனர். அரசு சார்ந்த விவகாரங்களில் ட்ரம்ப் மற்றும் மஸ்க் எடுத்த அதிரடி முடிவுகளைக் கண்டித்து 1200 இடங்களில் இப்போராட்டம் நடைபெற்றது. பணிநீக்கம், நாடுகடத்தல் மற்றும் இதர பிரச்னைகளை சுட்டிக்காட்டி கண்டன முழக்கங்கள் எழுப்பபட்டன. வரி விதிப்பால் மற்ற நாடுகளை பகைத்து கொண்ட டிரம்ப்பை சொந்த நாட்டிலும் சிக்கல் உருவாகியுள்ளது.
Similar News
News November 3, 2025
2-வது நாளாக களமிறங்கிய EPS!

ஒரு பக்கம் செங்கோட்டையன் நீக்கம் உள்ளிட்ட உட்கட்சி பிரச்னைகள் இருந்தாலும், மற்றொரு பக்கம் 2026 சட்டமன்ற தேர்தலுக்கான பணிகளை தீவிரமாக மேற்கொண்டு வருகிறார் EPS. அதன் ஒரு பகுதியாக நேற்று பூத் கமிட்டி நிர்வாகிகளை, ஆன்லைனிலேயே ஒருங்கிணைப்பது உள்ளிட்ட பணிகளை மேற்கொள்வது குறித்து, IT விங் மாவட்ட பொறுப்பாளர்களுடன் ஆலோசனை நடத்தினார். தொடர்ந்து, 2-வது நாளாக இன்றும் ஆலோசனை நடைபெற்று வருகிறது.
News November 3, 2025
GALLERY: 2025-ல் முதல் கோப்பையை வென்ற அணிகள்!

உலகளவில் பல அணிகளும் 2025-ம் ஆண்டில் தான் தங்களின் முதல் கோப்பையை வென்றுள்ளன. யோசித்தால், சட்டென நினைவுக்கு வருவது RCB மட்டுமே. ஆனால், உலகளவில் பல அணிகள் இந்த பட்டியலில் உள்ளன. ஒரு அணி கிட்டத்தட்ட 119 வருடங்களாக காத்திருந்தது குறிப்பிடத்தக்கது. அவை எந்தெந்த அணிகள் என அறிய மேலே உள்ள் போடோக்களை வலது பக்கம் Swipe பண்ணி பாருங்க. இப்பதிவை நண்பர்களுக்கும் ஷேர் பண்ணுங்க.
News November 3, 2025
வெள்ளி விலை ₹2,000 உயர்ந்தது

கடந்த மாத தொடக்கத்தில் கிடுகிடுவென உயர்ந்து மாத இறுதியில் சரிவை கண்ட வெள்ளி, நவ. மாதம் தொடங்கியது முதலே உயர்ந்து வருகிறது. அந்த வகையில், இன்று(நவ.3) கிராமுக்கு ₹2 அதிகரித்து ₹168-க்கும், பார் வெள்ளி ₹1 கிலோவுக்கு ₹2,000 அதிகரித்து ₹1,68,000-க்கும் விற்பனையாகிறது. வெள்ளி விலை இனி வரும் நாள்களில் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக கணிக்கப்பட்டுள்ளதால், கடந்த மாதம் வாங்கி குவித்தவர்கள் நிம்மதி அடைந்துள்ளனர்.


