News April 6, 2025
2ஆம் வகுப்பு மாணவிக்கு டி.சி! அதிர்ச்சி சம்பவம்

கோவையில் உள்ள தனியார் பள்ளியில் 2ஆம் வகுப்பு மாணவி சரியாக படிக்கவில்லை என கூறி டி.சி பெற்றுக்கொள்கிறோம் என முத்திரைதாளில் எழுதி வாங்கிய சம்பவம் பெற்றோர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மாணவியை மிரட்டி படிக்கவைக்க இத்தகைய செயலில் ஈடுபட்டதாக பள்ளி நிர்வாகம் கூறினாலும், இது மாணவியின் மனநிலையை பாதிக்கும் என பெற்றோர்கள் அச்சம். இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Similar News
News April 9, 2025
நகை தொழில் செய்ய ஆசையா?

கோவை ராமலிங்கம் கூட்டுறவு மேலாண்மை நிலையத்தில் நகை மதிப்பீட்டாளர் பயிற்சி நடைபெற உள்ளது. ஏப்ரல்15-ஆம் தேதி பயிற்சி தொடங்குகிறது. 10-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற, 15 வயது நிரம்பியவர்கள் விண்ணப்பிக்கலாம். ஏப்ரல் 16முதல் www.tncuicm.com இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பங்கள் மே.6 வரை மட்டுமே பரிசீலிக்கப்படும் என வங்கி சார்பாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
News April 9, 2025
கல்லாறு – பர்லியார் மலையேற்றம் மீண்டும் தொடக்கம்!

மேட்டுப்பாளையம், கல்லாறு – பர்லியார் இடையே அடர்ந்த வனப்பகுதிக்குள், மலையேற்றம் மேற்கொள்ளும் திட்டம், கடந்த ஆண்டு வனத்துறையால் தொடங்கப்பட்டது. பின்னர், கோடை வெயிலால், சமீபத்தில் இத்திட்டம் நிறுத்தப்பட்டது. இந்நிலையில் வரும் 15ஆம் தேதி மீண்டும் மலையேற்றம் தொடங்கவுள்ளதாம். வார இறுதி நாட்களில் நடைபெறும் மலையேற்றத்திற்கு, விருப்பம் உள்ளவர்கள்,<
News April 9, 2025
கோவைக்கு சிறப்பு பேருந்துகள்

தமிழ் புத்தாண்டு மற்றும் தொடர் விடுமுறையை முன்னிட்டு வார இறுதி நாட்களில் சிறப்பு பேருந்துகள் சென்னை, கோவை, திருப்பூர் உள்ளிட்ட இடங்களில் இருந்து இயக்கப்படும் என போக்குவரத்து அதிகாரிள் அறிவித்துள்ளனர். வார இறுதி நாட்களை முன்னிட்டு1,680 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும். அரசு போக்குவரத்துக் கழகம் தகவல் பயணத்திற்கு www.tnstc.in என்ற இணையதளம் மற்றும் மொபைல் செயலி மூலம் முன்பதிவு செய்து பயணிக்கலாம்.