News April 6, 2025
19 ஆண்டுகளுக்குப் பின் பிடிபட்ட தம்பதி

மானூர் மேலபிள்ளையார் குளத்தைச் சேர்ந்த காளிதாஸ் கருப்பசாமி மாரியப்பன் ஆகியோரிடம் மதுரையைச் சேர்ந்த பிரேம்குமார் அவரது மனைவி காளிஸ்வரி இருவரும் சேர்ந்து வேலை வாங்கித் தருவதாகக் கூறி ரூ.4,05,000 பணத்தை மோசடியில் ஈடுபட்டனர். நீதிமன்றத்தில் வழக்கு விசாரணையில் இருந்து வரும் நிலையில் கடந்த 2006-ஆம் ஆண்டு முதல் தலைமறைவாக இருந்து தேடப்பட்டு வந்த பிரேம்குமார் தம்பதியை கோவையில் இன்று போலீசார் கைது செய்தனர்.
Similar News
News August 27, 2025
கவின் கொலை வழக்கு காணொளி காட்சி மூலம் விசாரணை

கவின் கொலை வழக்கில் சுர்ஜித் அவருடைய தந்தை சப்-இன்ஸ்பெக்டர் சரவணன் மற்றும் ஜெயபால் ஆகியோர் இன்று நெல்லை இரண்டாவது கூடுதல் அமர்வு நீதிமன்றம் (தீண்டாமை தடுப்பு) ஆஜர் படுத்தப்படுவதாக இருந்தது. ஆனால் பாதுகாப்பு கருதி 3 பேரும் வீடியோ கான்பரசிங் காணொளி காட்சி மூலம் நீதிபதி ஹேமா முன்னிலையில் ஆஜர்ப்படுத்தப்பட்டனர். பின்னர் இந்த வழக்கு வேறு தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டது.
News August 26, 2025
நெல்லை ஆம்னி பேருந்தில் அதிக கட்டணமா??

நாளை விநாயகர் சதுர்த்தியை கொண்டாட நெல்லை மக்களே உங்கள் சொந்த ஊர்களுக்கு செல்ல வெளியூரில் இருந்து புறபட்டு இருப்பீர்கள்! சொந்த ஊர்க்கு புறபட்ட உங்களுக்கு ஆம்னி பேருந்தின் கட்டண உயர்வு அதர்ச்சியை கொடுக்கிறதா? ஆம்னி பேருந்தின் கட்டணம் அதிகம் வசூலித்தால் 9043379664 எண்ணில் ஆதாரத்துடன் புகாரளியுங்க… (குறிப்பு: நீங்கள் சொந்த ஊரில் இருந்து வெளியூர் திரும்பும் போது இந்த எண் பயன்படும்) SHARE பண்ணுங்க!
News August 26, 2025
நெல்லை: விநாயகரை வரவேற்கும் 6 படிகள்!

நெல்லை மக்களே! நாளை விநாயகர்சதுர்த்தி அன்று செய்ய வேண்டியவை
1. வீட்டை சுத்தம் செய்யுங்க.
2. விநாயகர் சிலையை நிறுவுங்க.
3. பூ,மாவிலையால் அலங்காரம்.
4. ஓம் ஸ்ரீ கணேஷாய நமஹ – மந்திரத்தை 108 முறை சொல்லுங்க.
5. கொழுக்கட்டை, சுண்டல் முதலிய நைவேதியம்.
6. தீபம், கற்பூரம் காட்டி ஆரத்தி
குடும்பத்துடன் சென்று மணி மூர்த்தீஸ்வரர் உச்சிஷ்ட விநாயகர் மற்றும் பாக்கிய விநாயகர் கோவில் சென்று தரிசனம் செய்யுங்க. ஷேர்