News April 6, 2025

இராணிப்பேட்டை: கல்விக்கடன் பெற அரசின் சூப்பர் திட்டம்…!

image

உயர்கல்வி படிக்க விரும்பும் மாணவர்களின் நிதித்தேவையை பூர்த்தி செய்ய பிரதான் மந்திரி வித்யாலஷ்மி யோஜனா திட்டம் மத்திய அரசால் வழங்கப்படுகிறது. ஆண்டு வருமானம் ரூ.8 இலட்சத்துக்கும் கீழ் உள்ள மாணவர்களுக்கு இத்திட்டம் பொருந்தும். NIRF தரவரிசைப்படி கல்லூரிகள் தேர்ந்தெடுக்கப்படுகின்றன. https://pmvidyalaxmi.co.in/ என்ற இணையதளம் மூலம்  கூடுதல் விபரங்களை தெரிந்துகொண்டு ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

Similar News

News April 9, 2025

இரவு ரோந்தில் இருக்கும் போலீசார் பற்றிய தகவல்

image

ராணிப்பேட்டை மாவட்டத்தில் இன்று 09/04/2025 காவலுக்கு இருக்கும் போலீசார்  பற்றிய பெயர் குறிப்பு மற்றும் அலைபேசி எண்கள் மேலே உள்ள அட்டவணையில் கொடுக்கப்பட்டுள்ளன. இதனை ராணிப்பேட்டை பொதுமக்கள் தேவை ஏற்பட்டால் நிச்சயமாக இந்த அலைபேசி எண்ணை உபயோகிக்கலாம் என காவல்துறை தரப்பில் கூறப்பட்டுள்ளது.

News April 9, 2025

ராணிப்பேட்டை: மணியோசை தரும் பாறை

image

ராணிப்பேட்டை மாவட்டத்தின் முக்கிய கோயில்களில் ஒன்றாக காஞ்சனகிரி மலைக்கோயில் உள்ளது.1008 சுயம்பு லிங்கங்கள் உள்ள இங்கு மணிப்பாறை எனும் இடம் உள்ளது. இந்த மணிப்பாறையில் கல்லை வைத்து தட்டினால் மணியோசை கேட்பதால் இங்கு வருபவர்கள் இதை ஆச்சரியமாக பார்க்கின்றனர். இயற்கை சூழ்ந்த காஞ்சனகிரி மலை சிறந்த சுற்றுலா தலமாகவும் உள்ளது. ஷேர் பண்ணுங்க

News April 9, 2025

ராணிப்பேட்டை: சொத்துவரி செலுத்துவோருக்கு கட்டண சலுகை 

image

ராணிப்பேட்டை நகராட்சி நிர்வாகம் விடுத்துள்ள அறிக்கையில் 2025-26ஆம் ஆண்டுக்கான அரையாண்டு சொத்து வரியை ஏப்ரல் 30க்குள் செலுத்தும் நபர்களுக்கு 5% ஊக்கத்தொகை வழங்கப்படும் என கூறப்பட்டுள்ளது. மேலும் மேற்கண்ட கால அளவில் வரி செலுத்தாத நபர்களுக்கு ஒரு சதவீத தாமத வட்டி வசூலிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பானது முறையாக வரி செலுத்துவோருக்கு பயன் உள்ளதாக அமையும் என தெரிவிக்கப்பட்டுள்து.

error: Content is protected !!