News April 6, 2025
ஏப்ரல் 06: வரலாற்றில் இன்று

*1580 – இங்கிலாந்தில் பெரும் நிலநடுக்கம் ஏற்பட்டது.
*1919 – மகாத்மா காந்தி பொது வேலை நிறுத்தத்தை அறிவித்தார். * 1936 – ஐக்கிய அமெரிக்கா, ஜார்ஜியாவில் சுழற்காற்று தாக்கியதில் 203 பேர் உயிரிழந்தனர். *1968 – அமெரிக்காவின் இண்டியானா மாநிலத்தில் இடம்பெற்ற இரட்டைக் குண்டுவெடிப்புகளில் 41 பேர் கொல்லப்பட்டு, 150 காயமடைந்தனர். *1973 – பயனியர் 11 விண்ணுக்கு ஏவப்பட்டது.
Similar News
News April 9, 2025
போய் வாருங்கள் அப்பா.. கண்ணீருடன் தமிழிசை

இசை.. இசை.. என்று கூப்பிடும் என் அப்பாவின் கணீர் குரல் இன்று காற்றின் இசையோடு கலந்து விட்டதாக தமிழிசை கண்ணீருடன் தெரிவித்துள்ளார். அவரின் கண்ணீர் அஞ்சலியில் மகிழ்ச்சியோடு போய் வாருங்கள் அப்பா.. நீங்கள் மக்களுக்கு என்ன எல்லாம் செய்ய வேண்டும் என நினைத்தீர்களோ அதை நாங்கள் செய்வோம் என கூறியுள்ளார். சீராக வாழ்வதைக் கண்டு, பெருமைப்பட்டு எங்களை விட்டு மறைந்திருக்கிறார் எனவும் அவர் பதிவிட்டுள்ளார்.
News April 9, 2025
ஸ்டீவ் ஜாப்ஸின் பொன்மொழிகள்

*பிரச்சனையை சரியாக வரையறுத்துவிட்டாலே கிட்டத்தட்ட தீர்வு உங்களிடம் இருக்கும். *எதையாவது எளிமையாக மாற்றியமைப்பதற்கு, ஏராளமான கடின உழைப்புத் தேவைப்படுகிறது. *உங்கள் இதயத்தையும் உள்ளுணர்வையும் பின்தொடர தைரியம் வேண்டும். *உங்களுக்குப் பேரார்வம் இல்லையெனில், உங்கள் இலக்கைவிட்டு வெளியேறிவிடுவீர்கள்.
News April 9, 2025
தொடரும் தோனியின் சாதனை

பேட்டிங்கில் தோனி சற்று சறுக்கினாலும் அவரது விக்கெட் கீப்பிங் இன்றும் தலைசிறந்ததாகவே உள்ளது. அவரின் மின்னல் வேக ஸ்டெம்பிங்கிற்கு அருகே கூட இளம் வீரர்களால் வர முடியாது. நேற்றைய ஆட்டத்தில் நேகல் வாதேராவின் கேட்சை பிடித்ததன் மூலம் IPL வரலாற்றில் 150 கேட்சுகளை பிடித்த முதல் வீரர் என்ற பெருமையை பெற்றார். இதற்கு அடுத்த இடத்தில் 137 கேட்சுகளுடன் தினேஷ் கார்த்திக் உள்ளார்.