News April 6, 2025
பாம்பன் பாலத்தின் HYPERLAPSE வீடியோ!!

புதிய பாம்பன் ரயில் பாலத்தை பிரதமர் மோடி இன்று திறந்து வைக்கிறார். பாம்பன் ரயில் பாலத்தின் கட்டுமானப் பணிகள் கடந்த டிசம்பர் மாதம் நிறைவடைந்தது. இந்நிலையில் நண்பகல் 12 மணியளவில் இந்தியாவின் முதல் செங்குத்து தூக்கு கடல் பாலமான புதிய பாம்பன் பாலத்தை பிரதமர் திறந்து வைக்கிறார். இதனிடையே மண்டபம் ரயில் நிலையம் முதல் பாம்பன் ரயில் நிலையம் வரையிலான HYPERLAPSE வீடியோவை தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ளது.
Similar News
News April 9, 2025
வரலாற்றில் இன்று

* 1860 – முதன்முறையாக மனித குரல் பதிவு செய்யப்பட்டது. * 1870 – அமெரிக்க அடிமைத்தன எதிர்ப்புச் சங்கம் கலைக்கப்பட்டது* 1940 – ஜெர்மனி டென்மார்க் மற்றும் நோர்வே மீது படையெடுத்தது * 1963 – பிரிட்டன் பிரதமர் வின்ஸ்டன் சர்ச்சில் முதல் கௌரவ அமெரிக்க குடிமகனாக ஆனார். *2013 – ஈரானில் 6.1 அளவு நிலநடுக்கம் ஏற்பட்டதில் 32 பேர் உயிரிழந்தனர்.
News April 9, 2025
ஸ்டேடியத்தை திரும்பி பார்க்க வைத்த சாஹலின் காதலி

யுஸ்வேந்திர சாஹலின் காதலி என கூறப்படும் ஆர்ஜே மஹ்வாஷ் நேற்றைய சென்னைக்கு எதிரான ஆட்டத்தில் ஸ்டேடியத்திற்கு வந்திருந்தார். ஸ்டேடியத்தில் இருந்து அவர் சாஹலை உற்சாகப்படுத்திய காட்சிகள்தான் தற்போது இணையத்தில் வைரலாகியுள்ளது. சாஹலுக்கும் அவரது மனைவிக்கும் கடந்த மாதம் விவாகரத்து ஆன நிலையில் அவர் தற்போது மஹ்வாஷுடன்தான் டேட்டிங் செய்து வருவதாக கூறப்படுகிறது.
News April 9, 2025
போய் வாருங்கள் அப்பா.. கண்ணீருடன் தமிழிசை

இசை.. இசை.. என்று கூப்பிடும் என் அப்பாவின் கணீர் குரல் இன்று காற்றின் இசையோடு கலந்து விட்டதாக தமிழிசை கண்ணீருடன் தெரிவித்துள்ளார். அவரின் கண்ணீர் அஞ்சலியில் மகிழ்ச்சியோடு போய் வாருங்கள் அப்பா.. நீங்கள் மக்களுக்கு என்ன எல்லாம் செய்ய வேண்டும் என நினைத்தீர்களோ அதை நாங்கள் செய்வோம் என கூறியுள்ளார். சீராக வாழ்வதைக் கண்டு, பெருமைப்பட்டு எங்களை விட்டு மறைந்திருக்கிறார் எனவும் அவர் பதிவிட்டுள்ளார்.