News April 6, 2025
பல்லு துலக்கலனா மாரடைப்பு வருமா? என்னய்யா சொல்றீங்க!

இரவு தூங்குவதற்கு முன் பற்களை துலக்காவிட்டால், மாரடைப்பு உள்ளிட்ட இதயம் தொடர்பான பிரச்னைகள் வரலாம் என்று ஹார்வார்டில் பயிற்சி பெற்ற டாக்டர் சவுரவ் தெரிவித்துள்ளார். இரவு பல் துலக்காமல் தூங்கும்போது, வாயில் படிந்திருக்கும் பாக்டீரியாக்கள் ரத்தத்தில் கலப்பதாகவும், அது Inflammationஐ ஏற்படுத்தி இதய பாதிப்புகளை உருவாக்குவதாகவும் கூறப்படுகிறது. கவனம் மக்களே…
Similar News
News October 23, 2025
விண்ணில் தெரிந்த அற்புதம்… அரிய PHOTO

பிரபஞ்சத்தின் பேரழகை பார்க்க சிறந்த இடங்களில் ஒன்று நியூசிலாந்து. அந்நாட்டின் தென் தீவுக்கு milky way-வை போட்டோ எடுக்க சென்ற 3 போட்டோகிராபர்களின் கேமராவில் அற்புத காட்சி சிக்கியது. புயலின் போது உருவாகும் red sprites (சிவப்பு கீற்றுகள்) 90 கிமீ வரை உயரும். ஆனால், கண்ணிமைக்கும் நேரத்தில் மறைந்துவிடும் என்பதால் படம்பிடிப்பது கடினம். இந்நிலையில் தான் இவர்கள் கேமராவில் இந்த அரியக் காட்சி சிக்கியது.
News October 23, 2025
பெரியார் சிலையில் கை பட்டால் வெட்டுவேன்: வைகோ

பல மாநிலங்களில் வெறியாட்டம் போடும் இந்துத்துவ சக்திகள் தமிழகத்திலும் நுழைந்துவிடலாம் என மனப்பால் குடிக்கிறார்கள் என வைகோ குற்றம்சாட்டியுள்ளார். மேலும் பெரியார் சிலையை உடைக்கும் எண்ணம் உள்ளவர்கள், எங்கு எப்போது என்று சொல்லிவிட்டு வாருங்கள் என தெரிவித்த அவர், உங்கள் கை துண்டாக வெட்டப்படும் என கடுமையாக எச்சரித்துள்ளார். அப்படி ஒரு நிலைமை ஏற்பட்டால் நிச்சயம் அதை நானே செய்வேன் எனவும் தெரிவித்துள்ளார்.
News October 23, 2025
International Roundup: அணு ஆயுத பயிற்சியில் ஈடுபட்ட ரஷ்யா

*டிரம்ப் – புடின் பேச்சுவார்த்தை ஒத்திவைக்கப்பட்ட நிலையில், ரஷ்யா அணு ஆயுத பயிற்சியை மேற்கொண்டுள்ளது. *உக்ரைனுக்கு போர் விமானங்களை வழங்க ஸ்வீடன் முடிவு. *காஸா போர் நிறுத்தத்தை அமல்படுத்துவது தொடர்பாக இஸ்ரேல் PM நெதன்யாகுவை USA துணை அதிபர் ஜேடி வான்ஸ் சந்தித்தார். *உகாண்டா சாலை விபத்தில் 46 பேர் உயிரிழப்பு. *தென் கொரியாவிற்கு டிரம்ப் பயணம் மேற்கொள்ள உள்ள நிலையில், வடகொரியா ஏவுகணை சோதனை.