News April 6, 2025

அப்துல் கலாமின் பொன்மொழிகள்

image

*ஒரு சிறந்த புத்தகம் நூறு நல்ல நண்பர்களுக்குச் சமம், ஆனால் ஒரு நல்ல நண்பன் ஒரு நூலகத்திற்கு சமம். *சூரியனைப் போல நீங்கள் பிரகாசிக்க விரும்பினால், முதலில் சூரியனைப் போல எரியுங்கள். *ஒருவரைத் தோற்கடிப்பது மிகவும் எளிதானது, ஆனால் ஒருவரை வெல்வது மிகவும் கடினமானது. *என்னைப் பொறுத்தவரை, எதிர்மறையான அனுபவம் என்று எதுவும் இல்லை. *ஒரு மாணவரின் மிக முக்கியமான பண்புகளில் ஒன்று கேள்வி கேட்பது.

Similar News

News April 9, 2025

கான்வேயை வெளியேற்றிய சென்னை

image

பஞ்சாப் அணிக்கு எதிரான ஐபிஎல் போட்டியில் சென்னையின் தொடக்க வீரர் கான்வே ரிட்டயர்ட் அவுட் மூலம் வெளியேறினார். 69 ரன்கள் எடுத்த அவருக்கு இறுதி நேரத்தில் அதிரடியாக விளையாட முடியவில்லை. ஆகையால், ரிட்டயர்ட் அவுட் மூலம் தானாக வெளியேறினார். அவரைத் தொடர்ந்து ஜடேஜா களத்திற்கு வந்து தோனியுடன் இணைந்திருக்கிறார்.

News April 9, 2025

கூட்டுறவு சங்கங்களுக்கு தேர்தல் எப்போது? அமைச்சர் பதில்

image

கூட்டுறவு சங்கங்களுக்கு எப்போது தேர்தல் நடத்தப்படும் என்பதற்கு அமைச்சர் பெரிய கருப்பன் பதில் அளித்துள்ளார். கூட்டுறவு சங்கங்களில் 1.59 கோடி பேர் உறுப்பினர்களாக உள்ளதாகவும், அவர்களில் 97,83,634 பேரின் ஆதார், குடும்ப அட்டை விவரம் இணைக்கப்பட்டு உள்ளது, எஞ்சியோரின் விவரம் இணைக்கும் பணி நடப்பதாகவும் அவர் கூறியுள்ளார். இந்தப் பணி முடிந்ததும் தேர்தல் நடத்தப்படும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

News April 9, 2025

த்ரிஷாவுக்கு என்ன ஆச்சு?

image

நடிகை த்ரிஷாவின் சமீபத்திய புகைப்படங்களில், அவர் மெலிந்து காணப்படுவது பேசுபொருளாகியுள்ளது. அவருக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டதா என ரசிகர்கள் குழம்பி வரும் நிலையில், தீவிர உடற்பயிற்சி, டயட் முறைகளாலேயே உடல் எடை குறைந்து காணப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது. ஒப்புக் கொண்ட படங்களின் கதாபாத்திரங்களுக்கு ஏற்றார்போல் மெலிந்து காணப்படுவதாக கூறப்பட்டாலும், இன்னும் அதிகாரப்பூர்வ உறுதிபடுத்தல்கள் இல்லை.

error: Content is protected !!