News April 6, 2025
அமேசான் வசமாகுமா டிக்-டாக்? தீவிர பேச்சுவார்த்தை

டிக்-டாக் செயலியின் USA செயல்பாட்டை தங்கள் நாட்டு நிறுவனத்திற்கு விற்க வேண்டும் என அதன் தாய் நிறுவனமான சீனாவின் பைட் டேன்ஸ்க்கு டிரம்ப் கெடு விதித்துள்ளார். இல்லையேல் டிக்-டாக்கிற்கு தடை விதிக்க நேரிடும் எனவும் அவர் எச்சரித்துள்ளார். இதையடுத்து, டிக்-டாக்கை வாங்குவது தொடர்பாக அமேசான் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. விரைவில் இதுகுறித்த அறிவிப்பு வெளியாகும் என சொல்லப்படுகிறது.
Similar News
News April 8, 2025
பெண்களை போல் வேடமிட்டு ₹3 லட்சம் மோசடி

100 நாள் வேலை திட்ட பலன்களை பெறுவதற்காக, பெண்களை போல் வேடமிட்டு ஆண்கள் ₹3 லட்சம் மோசடி செய்த சம்பவம் கர்நாடகாவில் நடந்துள்ளது. யாதகிர் மாவட்டத்தில், சேலை கட்டி முகம் தெரியாதவாறு முக்காடு போட்டு போட்டோ எடுத்து, 100 நாள் வேலை திட்டத்திற்கான NMMS-ல் அட்டெண்டன்ஸ் போட்டு மோசடி செய்துள்ளனர். அவுட்சோர்ஸிங் மூலம் பணியமர்த்தப்பட்ட சிலரால் இந்த மோசடி நடந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
News April 8, 2025
சித்திரை மாத ராசிபலன்: 5 ராசிக்காரர்களுக்கு சூப்பர்

வருகிற 14-ம் தேதி சித்திரை மாதம் பிறக்கிறது. இந்த மாதத்தில் 5 ராசிகளுக்கு சூப்பராக இருக்கும் என ஜோதிட நிபுணர்கள் கணித்துள்ளனர். அதாவது, மேஷம், மிதுனம், கடகம், சிம்மம், தனுசு ஆகிய 5 ராசிக்காரர்களின் வாழ்க்கையில் மகிழ்ச்சியும், செழிப்பும் அதிகரிக்கும். சூரியனைப் போல அதிர்ஷ்டம் பிரகாசிக்க வாய்ப்புள்ளது. பதவி உயர்வு, சம்பள உயர்வு பெற வாய்ப்புள்ளதாக ஜோதிட நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். நீங்க என்ன ராசி?
News April 8, 2025
மியான்மர் நிலநடுக்கத்திற்கு பலி 3,600ஆக அதிகரிப்பு

மியான்மர் நிலநடுக்கத்திற்கு பலியானோர் எண்ணிக்கை 3,600ஆக அதிகரித்துள்ளது. மார்ச் 28-ல் நேரிட்ட நிலநடுக்கத்தால் மியான்மரில் பேரழிவு ஏற்பட்டுள்ளது. இடிபாடுகளுக்கு இடையே சிக்கிய பலர் பலத்த காயமடைந்து சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டுள்ளனர். அவர்களில் பலர் தொடர்ந்து பலியாகி வருவதால் பலி அதிகரித்தபடி உள்ளது. தற்போது 5,017 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். 160 பேரை காணவில்லை. இதனால் பலி மேலும் உயரக்கூடும்.