News April 6, 2025
பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க

இன்று (ஏப்ரல் 06) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள்! பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email -way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 10 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். முதலில் அனுப்பும் 20 நபர்களின் புகைப்படங்கள் மட்டும் இதில் இடம்பெறும். உங்கள் அன்புக்குரியவர்களை வாழ்த்துங்கள். பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க!
Similar News
News April 8, 2025
துரத்தி வரும் KKR

KKR – LSG இடையேயான ஐபிஎல் போட்டியில், 239 என்ற இமாலய இலக்கை துரத்தும் KKR அணி, விடாமல் சண்டை செய்து வருகிறது. முதலில் விளையாடிய LSG அணி, மார்ஷ் & பூரனின் அபாரத்தால், 20 ஓவர்களில் 238 ரன்கள் குவித்தது. அதனை சேஸ் செய்து வரும் KKR அணி, ரஹானே, வெங்கடேஷ் ஐயரின் அதிரடியால் 10 ஓவர்களில் இரண்டு விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 129 ரன்கள் குவித்துள்ளது. எந்த அணி வெல்லும்?
News April 8, 2025
பெண்களுக்கு மின்சார ஆட்டோ வாங்க ரூ.3 லட்சம் கடன்: அரசு

பொருளாதாரத்தில் பின்தங்கிய 1,000 மகளிருக்கு மின்சார ஆட்டோ வாங்க கூட்டுறவு நிறுவனங்கள் வாயிலாக ரூ.3 லட்சம் கடன் அளிக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. கூட்டுறவுத்துறை அமைச்சர் பெரிய கருப்பன் மானியக் கோரிக்கை மீது பதில் தாக்கல் செய்துள்ளார். அதில், நிலமற்ற ஏழை பெண் விவசாய தொழிலாளர்கள் 2 ஏக்கர் நிலம் வாங்க ரூ.5 லட்சம் வரை கூட்டுறவு வங்கிகள் மூலம் கடன் வழங்கப்படும் எனத் தெரிவித்துள்ளார்.
News April 8, 2025
சொந்த நாட்டு மக்களுக்கே ஆப்பு வைத்த டிரம்ப்?

டிரம்பின் வரி உயர்வு அறிவிப்பு அவருக்கே பேக் ஃபயர் ஆகும் என JPMorgan Chase & Co நிறுவனத்தின் CEO ஜேமி டிமோன் எச்சரித்துள்ளார். இதனால் அமெரிக்காவில் இறக்குமதி, உள்ளூர் பொருள்களின் விலை உயர்ந்து, பணவீக்கம் அதிகரிக்கும் எனவும், நிறுவனங்களையும், மக்களையும் நேரடியாக பாதிக்கும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். மேலும், வளர்ந்து வரும் பொருளாதார நாடான இந்தியாவுடன் நட்புறவை பேணவும் அறிவுறுத்தியுள்ளார்.