News April 6, 2025

ஆண்களே எச்சரிக்கை…!

image

புற்றுநோய் வருவதற்கான வாய்ப்பு பெண்களைவிட ஆண்களுக்கே அதிகமாக இருப்பதாக ஸ்பெயினில் நடந்த ஆய்வில் உறுதி ஆகியுள்ளது. ஆண் பாலினத்தை தீர்மானிக்கும் எக்ஸ் குரோமோசோமில் இருக்கும் சில ஜீன்கள் செயலிழப்பதால் தான் ஆண்களுக்கு புற்றுநோய் அதிகம் வருவதாக ஆய்வில் தகவல். இதிலிருந்து தப்பிக்க என்ன வழி என்று ஆய்வில் ஏதும் கூறவில்லை. பாவம், ஆண்கள்!

Similar News

News September 17, 2025

TTF வாசன் தாலி கட்டினார் ❤️❤️ PHOTOS

image

தான் 5 ஆண்டுகளாக காதலித்து வந்த ஆசை மாமன் மகளை நேற்று கரம் பிடித்தார் TTF வாசன். இருப்பினும், மனைவியின் முகத்தை மறைத்தபடியே போட்டோவை வெளியிட்டிருந்தார். இந்நிலையில், இன்று தாலி கட்டுவது போன்றும், மெட்டி போடுவது போன்றும் உள்ள போட்டோஸை பகிர்ந்துள்ளார். ஆனால், தற்போதும் முகத்தை மறைத்தவாறே போட்டோவை வெளியிட்டுள்ளதால், ‘யார் அந்த ஸ்வீட்டினு சொல்லுங்க ப்ரோ’ என்று நெட்டிசன்கள் கேட்டு வருகின்றனர்.

News September 17, 2025

காதலில் நீங்கள் எந்த நிலை? இங்கே செக் பண்ணுங்க

image

திருமணம் என்பது நிறைவான துணையை கண்டெடுப்பது இல்லை. கடினமான நிலைகளை கடந்து ஒன்றாக வாழ்வது. காதல் – திருமண வாழ்க்கை 6 நிலைகளை கொண்டது என்கின்றனர் மனநல நிபுணர்கள். அந்த ஆறு நிலைகளை மேலே போட்டோக்களாக கொடுத்திருக்கிறோம். நடைமுறையில் பெரும்பாலான ஜோடிகள் 3-வது நிலையை தாண்டுவதில்லையாம். நீங்க எந்த நிலை? கமெண்ட்டில் சொல்லுங்கள். செய்தி பிடித்திருந்தால் லைக் செய்யுங்கள்.

News September 17, 2025

பசங்க ChatGPT யூஸ் பண்ணா, இனி பயப்பட தேவையில்லை

image

டீன்-ஏஜ் வயதினரின் பாதுகாப்பு மற்றும் பிரைவசியை காக்கும் வகையில் ChatGPT-யில் விரைவில் பாதுகாப்பு அம்சங்கள் சேர்க்கப்படும் என்று ஓபன்AI நிறுவனம் அறிவித்துள்ளது. இதற்காக வயது கணிப்பு முறை (13-17, 18+) கொண்டு வரப்படும். பயனருடனான interaction அடிப்படையிலும், தேவையெனில் வயதை உறுதிப்படுத்த ID வெரிபிகேஷனும் செய்யப்படுமாம். தற்கொலை போன்ற தலைப்புகளுக்கு AI பதில் சொல்லாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!