News April 6, 2025

ராஜஸ்தான் அணி அபார வெற்றி

image

இன்றைய ஐபிஎல் போட்டியில் பஞ்சாப் அணியை ராஜஸ்தான் அணி வெற்றி கொண்டது. முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான், அபாரமாக விளையாடி 205 ரன்கள் குவித்தது. ஜெய்ஸ்வால் அதிகபட்சமாக 67 ரன்கள் எடுத்தார். அதனை சேஸ் செய்ய களமிறங்கிய பஞ்சாப் ஆரம்பம் முதலே சொதப்பியது. இறுதியில், 20 ஓவர்கள் முடிவில் அந்த அணியால் 155 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. ராஜஸ்தானின் ஆர்ச்சர் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

Similar News

News April 8, 2025

எந்த ரேஷன் கடையிலும் பொருள் வாங்கலாம்: TN அரசு

image

‘ஒரே நாடு, ஒரே குடும்ப அட்டை’ திட்டத்தின்கீழ் எந்த ரேஷன் கடையிலும் மக்கள் பொருள்களை வாங்கலாம் என்று அமைச்சர் சக்கரபாணி அறிவித்துள்ளார். சட்டப்பேரவையில் அவர் தாக்கல் செய்த கொள்கை விளக்க குறிப்பில், TN-ல் முதல்கட்டமாக 3,139 ரேஷன் கடைகளும், 2-ம் கட்டமாக 5,000 கடைகளும் நவீனமயம் ஆக்கப்பட்டதாக கூறப்பட்டுள்ளது. 3-ம் கட்டமாக 10,000 கடைகள் நவீனமயமாக்கப்பட இருப்பதாகவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

News April 8, 2025

ஜெய்ப்பூர் குண்டுவெடிப்பு வழக்கு.. 4 பேருக்கு ஆயுள்

image

ஜெய்ப்பூர் தொடர் குண்டுவெடிப்பு வழக்கில் 4 பேருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. 2008 மே மாதம் 8 குண்டுகள் வெடித்ததில் 71 பேர் பலியான நிலையில், 180 பேர் காயமடைந்தனர். இந்த வழக்கில் அஸ்மி, ஷாபாஸ், சைஃப்-உர்-ரஹ்மான், முகமது சயீப்-க்கு சிறப்பு கோர்ட் ஆயுள் தண்டனை விதித்துள்ளது. இதே வழக்கில் முன்பு 4 பேருக்கும் தூக்கு விதிக்கப்பட்டது. அதன் மேல்முறையீடு மனு SC-ல் நிலுவையில் உள்ளது.

News April 8, 2025

13,000 ஆண்டுகளுக்குப் பின் மறு பிறப்பு

image

Dire Wolf என்ற ஓநாய் இனம் 13,000 ஆண்டுகளுக்கு முன் பூமியில் இருந்து முற்றிலுமாக மறைந்தது. இதுகுறித்து, Game of Thrones என்ற ஆங்கில வெப் சீரிஸில் பேசியிருப்பார்கள். அந்த ஓநாய்களின் DNAக்களைக் கொண்டு ஆய்வாளர்கள் அதற்கு மீண்டும் உயிர் கொடுத்துள்ளனர். ரெமுஸ் & ரோமுலஸ் என்ற பெயர் கொண்ட இந்த இரண்டு ஓநாய்கள்தான் அழிந்து போன உயிரினத்தில் இருந்து பிறந்த முதல் உயிரினங்கள்.

error: Content is protected !!