News April 5, 2025

தென்காசி மாவட்ட இரவில் ரோந்து பணி காவலர்கள்

image

தென்காசி மாவட்டத்தில் பொதுமக்களுக்கு இரவு நேரங்களில் காவல்துறை உதவி தேவைப்பட்டால் பொதுமக்கள் தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண்கள் மேலே கொடுக்கப்பட்டுள்ளது. இன்று 05.04.2025 தென்காசி மாவட்ட காவல் மற்றும் நெடுஞ்சாலை இரவு ரோந்து பணியில் உள்ள காவல் அதிகாரிகள் பற்றிய விவரம். அவசர உதவி தேவைப்படுபவர்கள் 100 அல்லது மாவட்ட காவல் கட்டுப்பாட்டு அறை தொலைபேசி எண்-9884042100 ஐ தொடர்புகொள்ளலாம்.

Similar News

News September 16, 2025

தென்காசி: கடன் தொல்லையால் விஷமருந்தி தற்கொலை..!

image

ஆலங்குளம் அருகே ஓடைமறிச்சானை சேர்ந்தவர் கனகராஜ். இவருக்குக் கடன் தொல்லை இருந்து வந்ததால், குடும்பத்தினரிடையே தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இதனால் மனமுடைந்த அவர் நேற்று மதுவில் விஷம் கலந்து குடித்ததில் உயிரிழந்தார். ஆலங்குளம் போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக நெல்லை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுக்குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்துகின்றனர்.

News September 16, 2025

தென்காசி: ஆயுதங்களுடன் வீடியோ வெளியிட்ட வாலிபர் கைது

image

சமூக வலைத்தளங்களில் ஆயுதங்களுடன் வீடியோ, புகைப்படம் பதிவிடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கபடும் என தென்காசி எஸ்பி அரவிந்த் எச்சரித்துள்ளார். அச்சன்புதூரில் பாலமுருகன் (20) ஆயுதங்களுடன் இன்ஸ்டாகிராமில் வீடியோ வெளியிட்டதால், ஆயுத தடை சட்டத்தின் கீழ் கைது செய்யபட்டு சிறையில் அடைக்கபட்டார். சமூக வலைத்தள பயனர்கள் பொறுப்புடன், சட்ட அறிவுடன் செயல்பட வேண்டும் என தெரிவிக்கப்பட்டது

News September 16, 2025

குற்றாலத்தில் பிரதமர் பிறந்தநாளை முன்னிட்டு அன்னதானம்

image

பிரதமர் நரேந்திர மோடி 75வது பிறந்த நாளை முன்னிட்டு செப்டம்பர் 17ம் தேதி பாஜக தெற்கு ஒன்றியம் சார்பில் குற்றாலம் திரு குற்றாலநாதர் திருக்கோவிலில் சிறப்பு பூஜையும் அதைத்தொடர்ந்து குற்றாலம் கோவில் அன்னதான கூடத்தில் பொதுமக்களுக்கும் பக்தர்களுக்கும் அன்னதானமும் வழங்கப்படுகிறது. திரளாக பொதுமக்கள் கலந்து கொள்ள வேண்டும் என்று குற்றாலம் திருமுருகன் கேட்டுக்கொண்டார்.

error: Content is protected !!