News April 5, 2025

கடலூரில் கொடிக்கம்பங்களை அகற்ற வேண்டும் – ஆணையர் உத்தரவு

image

உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவின்படி,  கடலூர் மாநகராட்சியில் பொது இடங்களில் உள்ள அரசியல் கட்சிகள், சமூகம், மதம், சங்கம் போன்ற அனைத்து அமைப்புகளும் தங்கள் அமைப்புகள் சார்பாக வைக்கப்பட்டுள்ள கொடிக்கம்பங்களை வரும் 27ஆம் தேதிக்குள் அகற்ற வேண்டும் என கடலூர் மாநகராட்சி ஆணையர் அனு ஐ.ஏ.எஸ் உத்தரவிட்டுள்ளார்.

Similar News

News April 15, 2025

கடலூர்: வாகன ஓட்டிகளுக்கு முக்கிய அறிவிப்பு

image

கடலூர் மாவட்டம் தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகளில் இரவு நேரங்களில் லாரி மற்றும் கனரக வாகன ஓட்டுநர்கள் வாகனம் ஓட்டி செல்லும் சமயத்தில் ஓய்வு எடுக்கும் சூழ்நிலை வரும் பட்சத்தில் நெடுஞ்சாலையில் கனரக வாகனங்கள் நிறுத்துவதற்காக ஒதுக்கப்பட்ட இடம், சுங்கச்சாவடி மற்றும் காவல் நிலையம் அருகில் நிறுத்தி ஓய்வு எடுக்க வேண்டும் என கடலூர் மாவட்ட காவல் துறை அறிவிக்கப்பட்டுள்ளது.

News April 14, 2025

கடலூர்: மாதம் ரூ.15,000 சம்பளத்தில் வேலை

image

கடலூர் மாவட்டத்தில் அமைந்துள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் அலுவலக உதவியாளருக்கான (Office Assistant) 5 பணியிடங்கள் தமிழக அரசின் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி துறை வாயிலாக நிரப்பப்பட உள்ளன. இதற்கு மாத சம்பளமாக ரூ.15,000 வழங்கப்பட உள்ளது. குறைந்தது 12-ஆம் வகுப்பு கல்வித் தகுதி கொண்ட நபர்கள் tnprivatejobs.tn.gov எனும் இணையதளம் வாயிலாக விண்ணப்பித்து கொள்ளலாம். உங்க நண்பருக்கு இதனை SHARE செய்யவும்.

News April 14, 2025

கடலூர்: ரேஷன் கடை குறித்து புகார் அளிக்க சிறப்பு எண்!

image

தமிழகத்தில் பல திட்டங்கள் மக்கள் நன்மைக்காக செயல்படுத்தப்பட்டு வருகின்றன. அதிலொன்றுதான் மக்களுக்கு இலவசம் (ம) குறைந்த விலையில் ரேஷன் பொருட்கள் வழங்கும் திட்டம். ஆனால் சில காரணங்களால் மக்களுக்கு சரிவர பொருட்களை வழங்காமலும், கடையினை திறக்காமலும் ஊழியர்கள் செயல்படுவதாக புகார் எழுகிறது. இதுபோன்ற சம்பவம் உங்கள் பகுதியில் நடைபெறும் பட்சத்தில் 1800 425 5901 என்ற எண்ணில் புகார் அளிக்கலாம். SHARE பண்ணுங்க.

error: Content is protected !!