News April 3, 2024
தைவானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்

தைவானின் தலைநகர் தைபேயில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக அந்நாட்டு வானிலை மையம் தெரிவித்துள்ளது. இது ரிக்டர் அளவுகோலில் 7.4ஆக பதிவாகியுள்ளதாக கூறப்பட்டுள்ளது. தைவானின் தென்பகுதியில் ஏற்பட்டுள்ள இந்த நிலநடுக்கத்தால் ஜப்பானுக்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அத்துடன் ஜப்பானின் தெற்கு கடலோரப் பகுதி மக்கள் உடனே அங்கிருந்து வெளியேறுமாறும் எச்சரிக்கப்பட்டுள்ளது.
Similar News
News November 10, 2025
தவெக மீது நடவடிக்கை கூடாது: அரசு ரகசிய ஆர்டர்

அரசையும், திமுகவையும் விமர்சிக்கும் தவெகவினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டாம் என போலீசாருக்கு அரசு ரகசிய உத்தரவு பிறப்பித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தவெகவின் பொதுக்குழுவில் விஜய் தான் CM வேட்பாளர் என அறிவிக்கப்பட்டு விட்டதால், அதிமுக – தவெக கூட்டணி ஏற்பட வாய்ப்பில்லை. எனவே தேவையில்லாமல் விஜய்யை டென்ஷனாக்கி அதிமுக கூட்டணிக்கு செல்ல வைத்து விடக்கூடாது என்பதால் இந்த ரகசிய உத்தரவாம்.
News November 10, 2025
பாஜகவிற்கு ஆதரவு இல்லை.. வெளிப்படையாக அறிவிப்பு

நாங்கள் எப்போதும் ஒரு தனிப்பட்ட கட்சியையோ, அரசியல் தலைவரையோ ஆதரிப்பதில்லை என RSS தலைவர் மோகன் பகவத் தெரிவித்துள்ளார். நாங்கள் ராமர் கோயிலை கட்ட விரும்பினோம், அதனால் தான் பாஜகவை ஆதரித்தோம். ஒருவேளை காங்கிரஸ் கட்சி ராமர் கோயிலை கட்ட விரும்பியிருந்தால், அக்கட்சியை ஆதரித்து இருப்போம் என்றும் அவர் கூறியுள்ளார். மேலும், கொள்கைக்குதான் ஆதரவு, கட்சிக்கு இல்லை என்றும் தெரிவித்துள்ளார்.
News November 10, 2025
விநாயகர் போல் காட்சி அளிக்கும் முருகர் கோயில் மலை

தென்காசி மாவட்டம், கடையம் பகுதியில் தோரணமலை முருகன் கோயில் அமைந்துள்ளது. இந்த மலையானது பார்ப்பதற்கு யானை உட்கார்ந்த நிலையில், துதிக்கையால் நிலத்தில் ஊன்றியிருப்பது போல் இருக்கும். முருகன் கிழக்கு நோக்கி நின்ற கோலத்தில் இரு கைகளை உடைய சாத்வீக மூர்த்தியாக கையில் வேலுடன், மயில் வாகனத்தில் காட்சியளிக்கின்றார். தொழில் வளம் சிறக்க, குடும்ப பிரச்சனை தீர பக்தர்கள் முருகனை வணங்கி செல்கின்றனர்.


