News April 5, 2025

மன்மோகன் சிங் மனைவிக்கு பாதுகாப்பு குறைப்பு

image

மன்மோகன் சிங் மனைவிக்கு அளிக்கப்பட்ட இசட் பிளஸ் பாதுகாப்பை மத்திய அரசு குறைத்துள்ளது. மன்மோகன் சிங், அவரின் மனைவி குர்சரண் கெளருக்கு இருந்த பாதுகாப்பு அச்சுறுத்தலால் இசட் பிளஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டது. 2024 டிசம்பரில் மன்மோகன் மறைந்த பிறகும் இது நீடித்தது. அரசு ஆய்வில் அச்சுறுத்தல் குறைந்ததால், இசட் பிரிவாக பாதுகாப்பு குறைக்கப்பட்டுள்ளது. இதன்படி, இனி 36 கமாண்டோக்கள் பாதுகாப்பில் ஈடுபடுவர்.

Similar News

News February 17, 2026

யாருடன் கூட்டணி? உறுதியாக தெரிவித்த கிருஷ்ணசாமி

image

TN-ல் கூட்டணி தொடர்பான முடிவை ஏறக்குறைய அனைத்துக் கட்சிகளும் அறிவித்துவிட்டன. <<19154188>>தேமுதிகவும்<<>> NDA-ல் இணையவிருப்பதாக அரசியல் வட்டாரத்தில் பேசப்படுகிறது. ஆனால், கிருஷ்ணசாமி தனது நிலைப்பாட்டை இதுவரை அறிவிக்கவில்லை. இந்நிலையில், 2026-ல் கூட்டணி ஆட்சி என்பதில் தாங்கள் உறுதியாக இருப்பதாக குறிப்பிட்டுள்ள அவர், அடுத்த வாரத்தில் கூட்டணியை அறிவிப்பதாக தெரிவித்துள்ளார். எந்த கூட்டணி செல்வார்ன்னு நினைக்கிறீங்க?

News February 17, 2026

காலையில் இதை செய்தால் வெயிட் லாஸ் நிச்சயமாம்!

image

எப்படியாவது உடல் எடையை குறைத்திட வேண்டும் என எண்ணுபவர்கள் உடற்பயிற்சியுடன், சில பழக்க வழக்க மாற்றங்களையும் செய்திட வேண்டும். குறிப்பாக, காலையில் உங்களின் சில பழக்கங்களை மாற்றினால், உடல் எடை விரைவில் குறையும் என டாக்டர்கள் டிப்ஸ் அளிக்கின்றனர். அவை என்னென்ன என தெரிந்து கொள்ள மேலே உள்ள போட்டோவை இடது புறமாக Swipe செய்து பார்க்கவும். உங்களுக்கு தெரிஞ்ச டிப்ஸையும் கமெண்ட்ல பதிவிடவும்.

News February 17, 2026

தவெகவில் இணைந்த அதிமுக EX அமைச்சர்!

image

செங்கோட்டையன், கு.ப.கிருஷ்ணன் வரிசையில் அதிமுக EX அமைச்சர் ந.சுப்பிரமணியன் தவெகவில் இணைந்துள்ளார். 2011- 16 காலகட்டத்தில் அமைச்சராக இருந்த ந.சுப்பிரமணியன், நேற்றிரவு விஜய்யை சந்தித்து தன்னை தவெகவில் இணைத்துக் கொண்டார். புதுக்கோட்டையை சேர்ந்த இவர், 2011-ல் கந்தர்வக்கோட்டை தொகுதியில் வெற்றிபெற்று ஜெயலலிதாவின் அமைச்சரவையில் ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சராக பொறுப்பு வகித்தார்.

error: Content is protected !!