News April 5, 2025

பாம்பன் திறப்பு – பிரதமர் ட்வீட்

image

பிரதமர் நரேந்திர மோடி வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில், “நாளை ஏப்.6ஆம் தேதி ராம நவமி நாளில் தமிழ்நாட்டின் எனது சகோதர சகோதரிகளுடன் சேர்ந்திருப்பதை நான் ஆவலுடன் எதிர்நோக்கிக் காத்திருக்கிறேன். புதிய பாம்பன் ரயில் பாலம் திறந்து வைக்கப்படவுள்ளது. ராமநாதசுவாமி ஆலயத்தில் நான் பிரார்த்தனை நடத்தவுள்ளேன். ரூ.8,300 கோடி மதிப்பிலான வளர்ச்சிப் பணிகளும் அடிக்கல் நாட்டப்படும்” என பதிவிட்டுள்ளார்.

Similar News

News April 8, 2025

ராமநாதபுரம் மாவட்ட காவல்துறை நண்பகல் ரோந்து அதிகாரிகள் விவரம்

image

இராமநாதபுரம் மாவட்ட காவல்துறை நண்பகல் ரோந்து அதிகாரிகள் விபர பட்டியல் மற்றும் அலைபேசி எண்கள் குறிப்பிடப்பட்டுள்ளது. ராமநாதபுரம், ராமேஸ்வரம், கமுதி, முதுகுளத்தூர் கடலாடி, கீழக்கரை மற்றும் திருவாடானை பகுதிகளில் இன்று (ஏப்ரல் 8) நண்பகல் 2மணி முதல் மாலை 4 மணி வரை ரோந்து அதிகாரிகள் மற்றும் அலைபேசி எண்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவசர உதவிக்கு ஹலோ போலீஸ் எண்கள் 83000 31100(அ) 100ஐ அணுகவும்.

News April 8, 2025

முதல்வரை சந்தித்து நன்றி தெரிவித்த மீனவ பிரதிநிதிகள்

image

இராமேஸ்வரம், பாம்பன், தங்கச்சிமடம், மண்டபம் பகுதிகளை சேர்ந்த மீனவ சங்கங்களின் பிரதிநிதிகள் மற்றும் மகளிர் கூட்டமைப்பினர் இன்று (ஏப்.08) சென்னையில் தமிழக முதல்வர் மு.க ஸ்டாலினை இராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பினர் காதர்பாட்சா முத்துராமலிங்கம்  தலைமையில் சந்தித்து மீனவ பெருமக்களின் நல்வாழ்விற்காக ரூ.576.73 கோடி செலவில் பல்வேறு புதிய திட்டங்கள் தந்தமைக்கு நன்றி தெரிவித்தனர்.

News April 8, 2025

மீனவர்களுக்கான இன்றைய வானிலை அறிக்கை

image

ராமநாதபுரம் மாவட்டம் பாம்பன் முதல் ராமேஸ்வரம் வரை உள்ள மீனவர்கள் பயன்படும் வகையில் வானிலை அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அதில் இன்று (ஏப்.8) காற்றின் வேகம் 06 கிலோமீட்டர்/மணி முதல் 09 கிலோமீட்டர்/மணி வரை வீசக்கூடும், காற்றின் திசை வடக்கு நோக்கி இருக்கும். மேலும் மழைக்கான வாய்ப்பு இல்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!