News April 5, 2025
பஞ்சாபுக்கு 206 ரன்கள் இலக்கு

பஞ்சாப் அணிக்கு எதிரான ஐபிஎல் போட்டியில் 206 ரன்களை இலக்காக நிர்ணயித்திருக்கிறது ராஜஸ்தான் அணி. அந்த அணியின் தொடக்க வீரர் ஜெய்ஸ்வால் அதிரடியாக விளையாடி, 67 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். கேப்டன் சஞ்சு சாம்சன், ரியான் பராக் என அனைவரும் அவரவர் பங்கினை சரியாக செய்ய, 20 ஓவர்கள் முடிவில் ராஜஸ்தான் 4 விக்கெட்டுகளை இழந்து 205 ரன்கள் எடுத்துள்ளது.
Similar News
News April 7, 2025
இந்தியாவுக்கு விசா வழங்க சவுதி தடை: காரணம் என்ன?

இந்தியா உள்ளிட்ட 14 நாடுகளுக்கு உம்ரா மற்றும் பிசினஸ் விசாக்கள் வழங்குவதை சவுதி தற்காலிகமாக நிறுத்தி இருக்கிறது. இந்த விசாவில் வருபவர்கள் அப்படியே சட்டவிரோதமாக தங்கிவிட்டு ஹஜ் யாத்திரையையும் முடித்து விட்டு செல்வதாக கூறப்படுகிறது. இதனால் கூட்ட நெரிசலை கட்டுப்படுத்த முடியாத சூழல் ஏற்படுவதாக சவுதி அரசு கருதுகிறது. இதை தவிர்க்கவே ஜூன் மாதம் வரை விசா வழங்குவதை நிறுத்தி வைத்துள்ளது.
News April 7, 2025
வங்கியில் மாதம் ₹1,20,940 வரை சம்பளம்!

*IDBI வங்கியில் உள்ள 119 ஸ்பெஷலிஸ்ட் கேடர் அதிகாரி காலிப்பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளிவந்துள்ளது.
*அனுபவம் வாய்ந்த இளங்கலை, முதுகலை பட்டம் முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.
*மாத சம்பளமாக பதவிக்கேற்ப ₹64,820 – ₹1,20,940 வரை வழங்கப்படும். *குரூப் டிஸ்கஷன், நேர்முகத்தேர்வு மூலம் தேர்ச்சி நடைபெறும். *வரும் 20ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். *முழுத் தகவலுக்கு <
News April 7, 2025
அதிமுக முன்னாள் MLA காலமானார்

திருச்சி மாவட்டம் உப்பிலியபுரம் தொகுதி அதிமுக முன்னாள் MLA வி.அரங்கராஜ் காலமானார். உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். அவரின் மறைவுக்கு அதிமுக பொதுச் செயலாளர் இபிஎஸ் தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்ட இரங்கல் செய்தியில், அரங்கராஜை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவிப்பதாகக் கூறியுள்ளார்.