News April 5, 2025
நாமக்கல்: நாளை மழைக்கு வாய்ப்பு

நாமக்கல் மாவட்டத்தில் இன்று முதல் அடுத்து வரும் ஐந்து நாள்களுக்கான வானிலையில், வானம் பெரும்பாலும் மேகமூட்டத்துடன் காணப்படும். மாவட்டத்தின் சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை எதிர்பார்க்கப்படுகிறது. பகல் வெப்பம் 89.6 டிகிரிக்கு மிகாமலும், இரவு வெப்பம் 69.8 டிகிரியாகவும் காணப்படும் என நாமக்கல் கால்நடை மருத்துவக் கல்லூரி வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
Similar News
News April 13, 2025
காசநோய் ஒழிப்புத் திட்டத்தின்கீழ் பணியாற்ற அழைப்பு

நாமக்கல் மாவட்டத்தில் காசநோய் சுகாதார பார்வையாளர் பணியிடத்திற்கு ஒப்பந்த அடிப்படையில் தற்காலிகமாக விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.இதற்கு டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். சம்பளமாக ரூ.13,300 வழங்கப்படும். மேலும் விவரங்களுக்கு நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி (மோகனூர் சாலை) அல்லது 04286 – 292025 என்ற எண்ணை அழைக்கவும். இதை ஷேர் செய்யுங்கள்.
News April 13, 2025
நாமக்கல்லில் கறிக்கோழி விலை உயர்வு

நாமக்கல்லில் தேசிய முட்டை ஒருங்கிணைப்புக்குழு கூட்டம், நேற்று நடந்தது. அதில் முட்டை உற்பத்தி, மார்க்கெட்டிங் நிலவரம் குறித்து பண்ணையாளர்கள் விவாதித்தனர். இதையடுத்து, 415 காசாக நிர்ணயம் செய்யப்பட்டது. ஒரு கிலோ 85 ரூபாய்க்கு விற்ற முட்டைக்கோழி விலையை, எவ்வித மாற்றமும் செய்யாமல், அதே விலையிலும் கறிக்கோழி விலையில் ரூ.7 உயர்த்தி ரூ. 96 க்கும் நிர்ணயம் செய்யப்பட்டது.
News April 13, 2025
நாமக்கல்லில் கை வரிசை காட்டிய சர்வேயர் போலீஸ் பிடியில்!

திருச்செங்கோட்டைச் சேர்ந்த விஜயகுமாரி என்பவரது நிலத்தை அளவீடு செய்து கூட்டு பட்டாவில் இருந்து தனிப்பட்டாவாக மாற்றித் தருவதற்காக, சர்வேயர் பூபதி (36) என்பவர் 9 ஆயிரம் ரூபாய் லஞ்சம் கேட்டுள்ளார். இதுகுறித்து விஜயகுமாரி அளித்த புகாரின் பேரில், விசாரணை மேற்கொண்ட போலீசார், லஞ்சம் வாங்க முயன்ற பூபதியை கையும் களவுமாக கைது செய்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.