News April 5, 2025

ரயிலில் RAC டிக்கெட்.. ரீபண்ட் விதி தெரியுமா?

image

ரயிலில் கன்பர்ம் டிக்கெட் போக RAC டிக்கெட் கிடைத்தாலும், பயணி தடையின்றி பயணம் செய்யலாம். ஆனால் படுக்கை வசதி தரப்படாது. அமர்ந்தபடி பயண தூரம் முழுவதும் பயணிக்கலாம். அதேநேரத்தில் அந்த டிக்கெட்டை ரயில் புறப்பட அரை மணி நேரத்திற்கு முன்பு கேன்சல் செய்தால் உரிய பிடித்தம் போல எஞ்சிய தொகை ரீபண்ட் தரப்படும். இல்லையேல் ரீபண்ட் கிடைக்காது. இந்தத் தகவலை மற்றவர்களுக்கும் பகிருங்க.

Similar News

News December 7, 2025

BREAKING: அறிவித்தார் செங்கோட்டையன்

image

தவெகவில் இணைந்தபிறகு கொங்கு மண்டலத்தில் கட்சியை வலுப்படுத்த செங்கோட்டையன் தீவிரமாக பணியாற்றுகிறார். இந்நிலையில், தனது சொந்த மாவட்டமான ஈரோட்டில் டிச.16-ம் தேதி நடைபெறவிருக்கும் பொதுக்கூட்டத்தில் விஜய் பங்கேற்க இருப்பதாக செங்கோட்டையன் அறிவித்துள்ளார். மேலும், அனுமதி கேட்டு கலெக்டரிடம் மனு கொடுக்கப்பட்டுள்ளது. அனுமதி கிடைத்த உடனே பொதுக்கூட்டத்திற்கான ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்படும் என்றார்.

News December 7, 2025

கெட்ட எண்ணத்தில் அப்படி சொல்லவில்லை: SA கோச்!

image

<<18401120>>இந்திய அணி<<>> வீரர்களை மண்டியிட வைக்க நினைத்தோம் என SA கோச் பேசியது சர்ச்சையானது. இந்நிலையில், கெட்ட எண்ணத்துடன் தான் அந்த வார்த்தையை பயன்படுத்தவில்லை என அவர் விளக்கம் அளித்துள்ளார். இந்தியாவை அதிக நேரம் விளையாட வைக்க வேண்டும் என்ற எண்ணத்தில் அவ்வாறு சொன்னதாக தெரிவித்த அவர், தான் வேறொரு வார்த்தையை பயன்படுத்தி இருக்க வேண்டும் என்றார். மேலும், பணிவுதான் SA டெஸ்ட் அணியின் அடித்தளம் எனவும் கூறினார்.

News December 7, 2025

44 ஆண்டுகளுக்கு பிறகு..

image

ரஜினி மீசையில்லாமல் கிளீன் ஷேவ் லுக்கில் நடித்த படம் எதுவென கேட்டால், ‘தில்லுமுல்லு’ என ஈசியாக சொல்லிவிடலாம். இந்த படம் வெளியாகி 44 ஆண்டுகளுக்கு பிறகு, மீண்டும் ரஜினி அது போன்ற லுக்கில் தோன்றவுள்ளாராம். கமல் தயாரிப்பில் ‘பார்க்கிங்’ ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்கத்தில் நடிக்கவுள்ள படத்தில் கிளீன் ஷேவ் லுக்கில் ரஜினி நடிக்கவுள்ளாராம். காமெடி ஜானரில் இந்த படம் உருவாகும் எனவும் கூறப்படுகிறது.

error: Content is protected !!