News April 5, 2025

உணவு ஆர்டர் பெயரில் மோசடி.. போலீஸ் எச்சரிக்கை 

image

இணையதளங்களில் குற்றங்கள் அதிகரித்து வரும் நிலையில், தற்போது மதுரை மாநகர காவல் துறையினர் மதுரை மக்களுக்கு ஒரு விழிப்புணர்வு அறிவிப்பை வெளியிட்டுள்ளனர். அதில், தாங்கள் ஆர்டர் செய்யாத உணவு, தங்களுக்கு வந்திருப்பதாக கூறி அதை திருப்பி அனுப்ப OTP கேட்கும் நபர்களிடம் எந்த விபரமும் தெரிவிக்க வேண்டாம் என்று மதுரை மாநகர் காவல் துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.

Similar News

News April 7, 2025

மதுரையில் ரூ,25,000 சம்பளத்தில் வேலை

image

மதுரை மாவட்டத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் 30 க்கும் மேற்பட்ட கடன் மீட்பு முகவர் பணிக்கு காலிபணியிடங்கள் உள்ளது. இந்த பணிக்கு10ம் வகுப்பு படித்திருந்தாலே போதும். 18 வயது முதல்40 வயது வரை உள்ள நபர்கள் விண்ணப்பிக்கலாம். மாத ஊதியமாக ரூ.25 ஆயிரம் வரை வழங்கப்படும். முன் அனுபவம் தேவையில்லை. <>இங்கு கிளிக் <<>>செய்து இந்த மாதம் 30-க்குள் விண்ணப்பிக்கலாம். வேலை தேடும் நபர்களுக்கு SHARE செய்யுங்க.

News April 7, 2025

மதுரையில் தமிழில் பெயர் பலகை இல்லை என்றால் அபராதம்

image

மதுரை மாவட்டத்தில் ”வணிக, உணவு நிறுவனங்கள், தொழிற்சாலைகளில் தமிழில் பெயர் பலகை அமைக்க தவறினால் மே 1 முதல் அபராதம் விதிக்கப்படும்” என தொழிலாளர்துறை எச்சரித்துள்ளது. மேலும் இவ்விதிகளை பின்பற்றாத நிறுவனங்களுக்கு 2 ஆண்டுகள் சிறை அல்லது ரூ. 1லட்சம் அபராதம் அல்லது இரண்டும் வழங்கலாம் என்பதால் விதியை தவறாமல் பின்பற்ற வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.தெரிந்தவர்களுக்கு SHARE செய்யவும்.

News April 7, 2025

மதுரையில் அடுத்த 2 மணி நேரத்தில் மழை

image

தென் கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. அடுத்த 24 மணி நேரத்தில் தென் வங்கக்கடல் பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக்கூடும்.
. இதன்காரணமாக இன்று(ஏப்.7) காலை 10 மணிக்குள் மதுரை மாவட்டத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. நண்பர்களுக்கு குடையை எடுத்துட்டு வெளிய போக சொல்ல மறக்காம SHARE பண்ணுங்க.

error: Content is protected !!