News April 5, 2025
அமைதி பாதை.. நக்சல்களுக்கு அமித்ஷா வேண்டுகோள்

ஆயுதங்களை கீழே போட்டு அமைதி பாதைக்கு திரும்பும்படி நக்சலைட் தீவிரவாதிகளுக்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா மீண்டும் வேண்டுகோள் விடுத்துள்ளார். சத்தீஸ்கர் மாநிலம் தண்டேவாடாவில் நடந்த நிகழ்ச்சியில் பேசிய அவர், என்கவுன்ட்டரில் நக்சல்கள் கொல்லப்படுவதை யாரும் விரும்பவில்லை என்றார். நக்சல் தீவிரவாதம் இல்லாத கிராமத்திற்கு வளர்ச்சிப் பணிக்காக ரூ.1 கோடி அளிக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.
Similar News
News October 24, 2025
டாப் 10-ல் கொல்கத்தா ரோல்

பிரபல உணவுத் தரவரிசை தளமான TasteAtlas, சமீபத்தில் உலகின் சிறந்த wraps பட்டியலை வெளியிட்டுள்ளது. இதில், இந்தியாவின் பிரபல உணவுகளில் ஒன்றான கொல்கத்தா கத்தி ரோல், டாப் 10-ல் இடம்பிடித்துள்ளது. உங்களுக்காக, சிறந்த wraps பட்டியலை, மேலே போட்டோக்களாக கொடுத்திருக்கிறோம். அவற்றை ஒவ்வொன்றாக ஸ்வைப் செய்து பாருங்க. கொல்கத்தா ரோலுக்கு எந்த இடம்? கமெண்ட்ல சொல்லுங்க.
News October 24, 2025
மனிதர்களுக்கு இனி வேலை இருக்காது: எலான் மஸ்க்

AI டெக்னாலஜி வரவால் பல நிறுவனங்கள் ஆள்குறைப்பு செய்துவருகின்றன. அமேசான் நிறுவனமும் 2027-க்குள் 1,60,000 பணியாளர்களை நீக்கிவிட்டு, பதிலாக ரோபோக்களை அமர்த்த திட்டமிட்டுள்ளது. இதுபற்றி கருத்து தெரிவித்த எலான் மஸ்க், ‘AI-யும் ரோபோக்களும் இனி எல்லா வேலைகளையும் எடுத்துக் கொள்ளும். மனிதர்கள் விரும்பினால் காய்கறிகள் வளர்ப்பது போன்ற வேலைகள் செய்யலாம்’ என X-ல் பதிவிட்டுள்ளார். உங்கள் கருத்து?
News October 24, 2025
₹1000 கோடி கனிமவள கொள்ளை: அன்புமணி

தென் மாவட்டங்களில் ₹1000 கோடி கனிமவள கொள்ளை நடைபெற்றுள்ளதாக அன்புமணி குற்றம்சாட்டியுள்ளார். இந்த கனிமவள கொள்ளையில் ஆளும் கட்சிக்கு தொடர்பு உள்ளதாகவும், இதுகுறித்து காவல்துறை விசாரணை நடத்தினால் அது நியாயமாக இருக்காது என்றும் கூறியுள்ளார். எனவே தென்மாவட்டங்களில் நடத்த கனிமவள கொள்ளை குறித்து சிபிஐ விசாரிக்க வேண்டும் எனவும் அன்புமணி வலியுறுத்தியுள்ளார்.