News April 5, 2025

உடல் எடையைக் குறைக்க க்ரீன் டீ குடிக்குறீங்களா?

image

மெட்டபாலிசத்தை அதிகரிப்பதால், எடையைக் கட்டுக்குள் வைத்துக்கொள்வதற்காக பலரும் க்ரீன் டீ குடிப்பார்கள். ஆனால், இந்த க்ரீன் டீயை அதிகமாக குடித்தால், அது பல உடல்நல பிரச்னைகளுக்கு வழிவகுக்கும் என சுகாதார வல்லுநர்கள் எச்சரிக்கின்றனர். தலைவலி, சீரற்ற இதயத்துடிப்பு கல்லீரல் பாதிப்பு மற்றும் தூக்கமின்மை போன்ற பிரச்னைகள் வரலாம் என சுட்டிக்காட்டுகின்றனர். அளவுக்கு மிஞ்சினால் அனைத்துமே நஞ்சு தான்!

Similar News

News April 7, 2025

300 இருக்கட்டும்… அதுல பாதிக்கூட வரல..!

image

நடப்பு IPL சீசனின் முதல் போட்டியில் SRH விளையாடியதைப் பார்த்து, அடேங்கப்பா… இவுங்க தான் 300 ரன்கள் அடிக்கப்போற ஃபர்ஸ்ட் டீம் என்றெல்லாம் கம்பு சுத்தினார்கள் ரசிகர்கள். ஆனால், இப்போ நிலைமையே வேறு. ஆம், பட்டா பாக்கியம்… படாட்டி லேகியம் என்ற போக்கில் கடைசி 2 மேட்சில் SRH 150 ரன்களுக்கே தடுமாறி விட்டது. ஃபேன்ஸ் புலம்ப ஆரம்பித்து விட்டனர். SRH மீளுமா.. நீங்க என்ன நினைக்கிறீங்க?

News April 7, 2025

ரெப்போ வட்டி குறைகிறது

image

வங்கிகளின் குறுகியகால கடனுக்கான ரெப்போ வட்டி விகிதத்தை ரிசர்வ் வங்கி 0.25% ( நாளை மறுநாள்) குறைக்க வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. வட்டி விகிதம் குறைந்தால், வீட்டுக்கடன், தனிநபர் கடன், வாகன கடன் வாங்கியவர்கள் பயன்பெறுவார்கள். ஆனால், ‘பிக்சட் டெபாசிட்’ போன்ற முதலீட்டிற்கு வட்டி குறையும் சிக்கலும் உள்ளது. மேலும், பணப்புழக்கம் அதிகரிக்கும், கடன் வாங்குதல் அதிகரிக்கும், நுகர்வு அதிகரிக்கும்.

News April 7, 2025

BREAKING: அமைச்சர் கே.என்.நேரு வீட்டிலும் சோதனை

image

திருச்சியில் அமைச்சர் கே.என்.நேருவின் வீட்டிலும் ED சோதனை நடைபெற்று வருகிறது. நேருவின் மகன் மற்றும் சகோதரர் தொடர்புடைய இடங்களில் சோதனை நடத்தி வந்த அதிகாரிகள், தற்போது தில்லை நகரில் உள்ள அமைச்சரின் வீட்டிலும் சோதனை நடத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. கோவையில் உள்ள அமைச்சரின் சகோதரர் வீட்டிலும் சோதனை நடந்து வருவது குறிப்பிடத்தக்கது.

error: Content is protected !!