News April 5, 2025
பாம்பன் புதிய பாலம் ரெடி.. நாளை திறக்கிறார் மோடி

பாம்பனில் ரூ.550 கோடியில் கட்டப்பட்ட புதிய ரயில்வே பாலத்தை மோடி நாளை திறந்து வைக்கவுள்ளார். 1914இல் அங்கு கட்டப்பட்ட பாலத்திற்கு பதிலாக கடலில் 2.07 கி.மீ. தூரம் புதிய பாலம் கட்டப்பட்டுள்ளது. இதன் மைய பகுதியில் கடலில் கப்பல்கள் செல்ல அனுமதிக்கும் வகையில் தூக்கு பாலம் வசதி ஏற்படுத்தப்பட்டு உள்ளது. முந்தைய பாலத்தை விட இது 3 மீட்டர் உயரமானது. ஸ்டெய்ன்லெஸ் ஸ்டீல் மூலம் கட்டுமானம் நடந்துள்ளது.
Similar News
News April 7, 2025
பிரபல இயக்குநர் டி.கே.வாசுதேவன் காலமானார்!

மலையாள இயக்குநர் டி.கே.வாசுதேவன் (89) காலமானார். நடிகர், கலை இயக்குநர், இயக்குநர் என 1960களில் மலையாள திரையுலகின் முக்கிய அங்கமாக வாசுதேவன் திகழ்ந்தார். மிகவும் பிரபலமான ஃபேமஸான ‘செம்மீன்’ படத்தில் இவர் அசோசியேட் இயக்குநராக பணியாற்றி இருக்கிறார். என்டே கிராமம், விஸ்வரூபம் போன்ற படங்களையும் இயக்கி இருக்கிறார். வாசுதேவன் மறைவுக்கு திரையுலகினரும், ரசிகர்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். #RIP
News April 7, 2025
மீனவர்களுக்கு ₹576 கோடியில் சிறப்புத் திட்டங்கள்: CM

சட்டப்பேரவையில் 110 விதியின் கீழ் மீனவர்கள் நலனுக்காக ₹576 கோடியில் சிறப்பு திட்டங்களை CM ஸ்டாலின் அறிவித்துள்ளார். தங்கச்சிமடத்தில் ₹150 கோடியில் மீன்பிடி துறைமுகம் அமைக்கப்படும், 7,000 மீனவர்களுக்கு உபகரணங்களுடன் பயிற்சி வழங்க ₹52 கோடி ஒதுக்கீடு செய்யப்படும், 14,700 பேருக்கு மீன்பிடி சாராத தொழில்களுக்கு பயிற்சி அளிக்க ₹53 கோடியில் திட்டம் செயல்படுத்தப்படும் என CM உறுதியளித்தார்.
News April 7, 2025
புதிய சாதனைக்கு ரெடியாகும் விராட் கோலி

தகர்க்க முடியாத பல சாதனைகளுக்கு சொந்தக்காரரான விராட் கோலி, மேலும் ஒரு சாதனைக்கு ரெடியாகியுள்ளார். டி20 போட்டிகளில் 13,000 ரன்களை எட்டிய முதல் இந்திய வீரர் என்ற சாதனையை படைக்க அவருக்கு 17 ரன்களே தேவை. ஒட்டுமொத்தமாக டி20 போட்டிகளில் அதிக ரன் குவித்தவர்கள் பட்டியலில் கெயில்(14,562), அலெக்ஸ் ஹேல்ஸ்(13,610), மாலிக்(13,557), பொல்லார்டுக்கு (13,537) அடுத்த இடத்தில் அவர் உள்ளார். கோலி இன்று சாதிப்பாரா?