News April 5, 2025
தீப்பிடிக்கும் AC… மக்களே எச்சரிக்கை!

கோடை தீவிரமடையும்போது, ஏசி சாதனங்கள் வெடிக்கும் விபத்துகளும் அதிகரிக்கின்றன. இதற்கு முக்கிய காரணம் ஏசி இயந்திரத்தை சரியாக பராமரிக்காதது தான் காரணம் என்கின்றனர் நிபுணர்கள். குறிப்பாக ஏசியில் தூசி அதிகம் சேர்வது, மின்சார பழுதுகள் மற்றும் மின்னழுத்த ஏற்ற இறக்கங்கள் தான் வெடித்து தீவிபத்து ஏற்பட முக்கிய காரணமாக உள்ளனவாம். ஆகவே, உடனே உங்கள் ஏசியை பராமரியுங்கள்; அச்சமின்றி தூங்குங்கள்!
Similar News
News September 18, 2025
இந்தி திணிப்புக்கு நோ என்ட்ரி: ஸ்டாலின்

அன்று முதல் இன்று வரை ஆதிக்கத்துக்கும், இந்தி திணிப்புக்கும் தமிழ்நாட்டில் நோ என்ட்ரிதான் என CM ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தொண்டர்கள் இருக்கும் வரை எந்தக் கொம்பனாலும் திமுகவை அசைத்துக்கூட பார்க்க முடியாது எனக் கூறிய அவர், எதிர்க்கட்சித் தலைவர் எனும் மாண்பை மறந்து EPS ஒருமையில் பேசுவதாக சாடினார். மேலும், வாக்காளர் பட்டியல் திருத்தம் என்ற பெயரில் நமது வாக்குரிமையை பறிப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
News September 18, 2025
சற்றுமுன்: இன்று ஒரே நாளில் விலை ₹1000 குறைந்தது

ஆபரணத் தங்கம் விலையை தொடர்ந்து வெள்ளி விலையும் 2-வது நாளாக குறைந்துள்ளது. இன்று ஒரு கிராம் வெள்ளியின் விலை ₹1 குறைந்து ₹141-க்கும், கிலோ வெள்ளி ₹1000 குறைந்து ₹1,41,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. நேற்று ₹2000, இன்று ₹1000 என 2 நாளில் வெள்ளி விலை ₹3000 குறைந்துள்ளது. வரும் நாள்களிலும் தங்கம் மற்றும் வெள்ளி விலை குறையலாம் என்பதால், நகை பிரியர்கள் சற்று மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
News September 18, 2025
கூட்டணியா? சற்றுநேரத்தில் மனம் திறக்கிறார் இபிஎஸ்

அமித்ஷா உடனான சந்திப்பு குறித்து EPS இன்று விளக்கமளிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. OPS, TTV உள்ளிட்டோரை NDA கூட்டணியில் இணைக்க அவர் சம்மதம் தெரிவித்ததாக கூறப்படுகிறது. அதுகுறித்தும், செங்கோட்டையன் விவகாரம் குறித்தும் விளக்கம் அளிக்கலாம். அவரின் செய்தியாளர் சந்திப்புக்கு பின்புதான், கூட்டணி குறித்து அதிமுகவின் நிலைபாடு என்ன என்பது தெரியவரும் என்பதால், எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.