News April 5, 2025
ஏசி தீப்பிடிக்க காரணங்கள்

*கண்டென்சர் காயிலில் தூசிகள் அதிகம் சேர்வதால், வெப்பம் வெளியேற முடியாமல் அளவுக்கதிகமாக சூடாகிறது *மட்டமான வயரிங், ப்ளக் பயன்பாடு, பழைய வயர்கள் பயன்படுத்துவது *வோல்டேஜ் ஏற்ற இறக்கம் *ஏசிக்கு உரிய கேஸ் வகைகளை பயன்படுத்தாமல், தவறான கேஸ் பயன்படுத்துவது. இந்த தவறுகளை முற்றிலும் தவிர்த்தால், ஏசி தீப்பிடிக்கும் விபத்துகளையும் தடுக்கலாம்.
Similar News
News December 28, 2025
ஆட்சியில் பங்கு கேட்டுள்ளோம்: செல்வப்பெருந்தகை

சமீபமாக ஆட்சியில் பங்கு என்ற கோரிக்கையை திமுக கூட்டணி கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன. தமிழக காங்., மேலிட பொறுப்பாளர் கிரிஷ் ஷோடங்கர் அதை வெளிப்படையாகவே தெரிவித்திருந்தார். இது குறித்து பேட்டியளித்த செல்வப்பெருந்தகை, தேர்தல் பொறுப்பாளர் என்ற முறையில், அவர் இந்த கோரிக்கையை CM ஸ்டாலினிடம் வலியுறுத்தியுள்ளதாக குறிப்பிட்டார். மேலும், தமிழக காங்கிரஸும் அதையே விரும்புவதாக அவர் கூறினார்.
News December 28, 2025
அதிமுகவில் இணைகிறாரா கே.சி.பழனிசாமி?

கே.சி.பழனிசாமி அதிமுகவில் இணையலாம் என பேசப்பட்ட நிலையில், அதுகுறித்து அவரே விளக்கமளித்துள்ளார். அதிமுக தன்னிடம் பேச்சுவார்த்தை நடத்தவில்லை என்ற அவர், பேச்சுவார்த்தை நடத்தவேண்டும் என எதிர்பார்ப்பதாகவும் தெரிவித்துள்ளார். மேலும், CM ஆக வேண்டும் என EPS-க்கு எண்ணம் இருந்தால் தற்போது தனித்தனியாக பிரிந்திருப்பவர்களை இணைத்து அதிமுக மேடையில் நிறுத்தலாம் எனவும் தனது மனதில் இருப்பதை போட்டுடைத்தார்.
News December 28, 2025
மாதவிடாய் நேரத்தில் இத குடிக்காதீங்க!

பொதுவாகவே காஃபி குடிப்பதை பலர் பழக்கமாக வைத்துள்ளனர். சிலருக்கு அது Addict. ஆனால் காஃபியை அளவோடு தான் குடிக்க வேண்டும். அதிலும் பெண்கள் சில நேரங்களில் தவிர்ப்பது நல்லது என டாக்டர்கள் கூறுகின்றனர். ➤கர்ப்ப காலத்தில் குடிக்க கூடாது ➤தாய்ப்பால் கொடுக்கும் தாய்மார்களும் காஃபியை தவிர்க்க வேண்டும் ➤மாதவிடாய் காலத்தில் குடித்தால் மன அழுத்தம் அதிகமாகும் ➤ரத்தசோகை உள்ளவர்கள் குடிக்க கூடாது. SHARE.


