News April 5, 2025
அரியலூர்: திருமணத் தடை தீர்க்கும் நந்தி பகவான்

அரியலூர், திருமழபாடி என்ற ஊரில் அருள்மிகு வைத்தியநாதர் கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலின் சிறப்பு என்னவென்றால் நந்தி பகவானுக்கு இங்கு தான் திருமணம் நடைபெற்றது. இங்கு திருமணம் தடை இருப்பவர்கள், திருமணம் தாமதமாபவர்கள் எல்லாம் பங்குனி புனர்பூசம் அன்று நடைபெறும் நந்தியின் திருமணத்தை பார்த்தால் அவர்களுக்கு விரைவில் திருமணம் நடக்கும் என்பது ஐதீகம். மணமுடிக்காத உங்கள் நண்பர்களுக்கு SHARE செய்யுங்கள்.
Similar News
News January 13, 2026
அரியலூர் ஆட்சியர் அறிவிப்பு

தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகைக்கு முந்தைய நாள் போகிப் பண்டிகையாக கொண்டாடப்பட்டு வருகிறது. சுற்றுச்சூழல் மற்றும் காற்று மாசுபாட்டை தடுக்கும் வகையில் பிளாஸ்டிக் பொருட்கள், டயர் டியூப், ரசாயனம் கலந்த பொருட்கள் ஆகியவற்றை தீயிட்டு எரிக்காமல் சுற்றுச்சூழலைப் பாதுகாக்க வேண்டும் என பொதுமக்களுக்கு அரியலூர் மாவட்ட ஆட்சியர் ரத்தினசாமி அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
News January 13, 2026
அரியலூர்: உங்கள் தொகுதி MLA நம்பர் தெரியுமா?

அரியலூர் மாவட்டத்தில் மொத்தமாக 3 சட்டமன்ற தொகுதிகள் அமைந்துள்ளன. இந்நிலையில் அச்சட்டமன்ற தொகுதிகள் மற்றும் அத்தொகுதி எம்.எல்.ஏ-க்களின் தொடர்பு எண்களை அறிந்து கொள்வோம். 1.அரியலூர் – கு.சின்னப்பா (96263 63666), 2.குன்னம்- எஸ்.எஸ்.சிவசங்கர் (94431 42600), 3.ஜெயங்கொண்டம் – கண்ணன். க.சொ. க (98431 50699). இதை மறக்காமல் SHARE செய்யவும்.
News January 12, 2026
பொங்கல் விழா கொண்டாடிய பாஜகவினர்

அரியலூர் மாவட்டம் கடம்பூர் கிராமத்தில் இன்று பொங்கல் விழாவை முன்னிட்டு, பாரதிய ஜனதா கட்சி சார்பாக ஒன்றிய தலைவர் அருண் ஏற்பாட்டில் பொங்கல் விழா நடைபெற்றது. இதில் அரியலூர் மாவட்ட பாஜக தலைவர் பரமேஸ்வரி ஆனந்த்ராஜு, ஒன்றிய நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் பலரும் கலந்துகொண்டனர். பின்னர் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.


