News April 5, 2025

அங்கன்வாடி மையங்களில் 306 காலி பணியிடங்கள் அறிவிப்பு

image

திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள அங்கன்வாடி மையங்களில் அங்கன்வாடி பணியாளர் 98 பேர், அங்கன்வாடி உதவியாளர் 208 பேர் என மொத்தம் 306 காலி பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதற்கு 10ஆம் வகுப்பு, 12ஆம் வகுப்பு படித்த பெண்கள் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சித் தலைவர் சிவ சவுந்தரவல்லி அறிவித்துள்ளார். விருப்பமுள்ளவர்கள் <>இங்கே கிளிக் <<>>செய்து ஏப்ரல் 23ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். ஆதரவற்ற பெண்கள் உட்பட அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க.

Similar News

News April 8, 2025

வாகன ஓட்டிகளுக்கு காவல் துறை எச்சரிக்கை

image

திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் இன்று (08-04-2025) விடுத்துள்ள எச்சரிக்கை செய்தியில் திருப்பத்தூர் மாவட்ட மக்கள் வாகனங்களில் செல்லும்போது செல் போன் பேச வேண்டாம் என்றும் அவ்வாறு செல்போன் பேசிக்கொண்டு வாகனங்களை அலட்சியமாக ஓட்டினால் அது விபத்து ஏற்படுத்த வழிவகுக்கும் என எச்சரித்துள்ளது. ஷேர் பண்ணுங்க. 

News April 8, 2025

திருப்பத்தூரில் 72 வாகனங்கள் பொது ஏலம் 

image

திருப்பத்தூர் மாவட்டத்தில் பல்வேறு வழக்கில் பறிமுதல் செய்யப்பட்ட 72 வாகனங்களை வருகின்ற 16/4/2025 அன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொது ஏலம் விடப்படுகிறது. மேலும் விவரங்களுக்கு 9944244350 மற்றும் https://tiruppathur.nic.in என்ற இணையதளம் வாயிலாக அறிந்து கொள்ளுமாறு ஆட்சியர் அறிவித்துள்ளார். குறைவான விலையில் வாகனம் வாங்க இது நல்ல வாய்ப்பு. ஷேர் பண்ணுங்க.

News April 8, 2025

ரூ.2.50 லட்சம் திருமண உதவித்தொகை

image

சாதி மறுப்புத் திருமணம் செய்பவர்களுக்கு அம்பேத்கர் கலப்பு திருமண உதவித் திட்டத்தின் கீழ் ரூ.2.50 லட்சம் நிதியுதவி வழங்கப்படுகிறது. இத்திட்டத்தில் பயன்பெற, தம்பதியில் ஒருவர் SC/ST வகுப்பைச் சேர்ந்தவராகவும், மற்றொருவர் BC/MBC வகுப்பைச் சேர்ந்தவராகவும் இருக்க வேண்டும். தம்பதிகளின் ஆண்டு வருமானம் ரூ.5 லட்சத்துக்கு குறைவாக இருக்க வேண்டும். ambedkarfoundation.nic.in என்ற இணையத்தில் விண்ணப்பிக்கலாம்.

error: Content is protected !!