News April 5, 2025
எங்கள் லேடி ஆஃப் ரான்சம் சர்சின் பெருமைகள்

எங்கள் லேடி ஆஃப் ரான்சம் சர்ச், கிறிஸ்தவர்களின் புனித தளங்களில் ஒன்று ஆகும். இங்கு ஏழு புனித பழங்களைக் குறிக்கும் வகையில், தேவாலயம் ஏழு கதவுகளைக் கொண்டதாக வடிவமைக்கப்பட்டுள்ளது என்று நம்பப்படுகிறது. வருடம் தோறும் இங்கு வரும் பக்தர்கள் மெழுகு ஏத்தி வேண்டினால் வேண்டியது கிடைக்கும் என்பது நம்பிக்கையாக உள்ளது. இயேசு பிறந்த டிசம்பர் மாதம் இங்கு மிக பிரம்மாண்டமாக கொண்டாடப்படுகிறது. ஷேர் பண்ணுங்கள்
Similar News
News April 11, 2025
மாவட்ட ஆட்சியர் தலைமையில் உறுதிமொழி ஏற்பு

அம்பேத்கர் பிறந்த நாளை நினைவு கூறும் வகையில் முன்னதாக கன்னியாகுமரி மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் இன்று ஆட்சித்தலைவர் அழகுமீனா தலைமையில் அரசு அலுவலர்கள், பணியாளர்கள் உட்பட அனைவரும் சமத்துவ நாள் உறுதிமொழியினை ஏற்றுக் கொண்டனர். மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஏராளமான அரசு அலுவலர்கள் கலந்து கொண்டு உறுதிமொழி ஏற்றனர்.
News April 11, 2025
சித்திரை விசு கனி காணும் நிகழ்ச்சி

கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில் ஆண்டுதோறும் தமிழ் புத்தாண்டான சித்திரை மாதம் ஒன்றாம் தேதி சித்திரை விசு கனி காணும் நிகழ்ச்சி நடைபெறும். இந்த ஆண்டு தமிழ் புத்தாண்டான ஏப்.14 அன்று சித்திரை விசு கனி காணும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. இதனால் அதிகாலை 4.30 மணிக்கு கோவில் மூலஸ்தான நடை திறக்கப்பட்டு சிறப்பு வழிபாடுகள் நடைபெற உள்ளன. மேலும் வெள்ளி சிம்மாசனத்தில் அம்மனுக்கு தாலாட்டும் நடைபெற உள்ளது.
News April 11, 2025
நாகர்கோவிலில் ரூ.15,000 ஊதியத்தில் வேலை

நாகர்கோவிலில் செயல்படும் தனியார் சாப்டுவேர் நிறுவனத்தில் 50 ஆராய்ச்சி ஆய்வாளர் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதில் இளங்கலை பொறியியல் படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். இதில் மாதம் ஊதியமாக ரூ.15,000 வழங்கப்படும். ஆர்வமுள்ளவர்கள் இங்கே <