News April 5, 2025
CSK அணிக்கு 184 ரன்கள் இலக்கு

சென்னையில் நடைபெற்று வரும் CSK vs DC ஐபிஎல் போட்டியில் CSK அணிக்கு 184 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த டெல்லி அணியின் தொடக்க வீரர் ராகுல், அதிகபட்சமாக 77 ரன்கள் விளாசினார். இதனையடுத்து, 20 ஓவர்கள் முடிவில் அந்த அணி, 6 விக்கெட்டுகளை இழந்து 183 ரன்கள் குவித்துள்ளது. CSK அணியின் கலீல் அகமது அதிகபட்சமாக 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
Similar News
News April 7, 2025
ராகுலுக்கு கேரள பாஜக கண்டனம்!

பாஜக, RSSன் பார்வை சர்ச் நிலங்கள் மீது திரும்பியிருப்பதாக ராகுல் காந்தி கூறியிருந்தார். முதலில் அரசமைப்பை நன்கு படியுங்கள் என கேரள பாஜக தலைவர் ராஜீவ் சந்திரசேகர் அதற்கு கண்டனம் தெரிவித்துள்ளார். ரயில்வே, தேயிலை தோட்ட உரிமையாளர்கள் போல சொந்தமாக நிலங்கள் வைத்திருப்பது தவறல்ல. கர்நாடக காங்கிரஸ் தலைவர்கள் போல மக்களிடம் இருந்து பறிப்பதுதான் தவறு. அதைதான் வக்பு வாரியம் செய்தது என விமர்சித்துள்ளார்.
News April 7, 2025
CSK-வின் அடுத்த ஆட்டம்.. இன்று டிக்கெட் விற்பனை

CSK – KKR அணிகள் வரும் 11-ம் தேதி சேப்பாக்கத்தில் மோத உள்ளன. இந்த போட்டிக்கான டிக்கெட் விற்பனை இன்று காலை 09:30 மணிக்கு ஆன்லைனில் தொடங்குகிறது. கடந்த முறை டிக்கெட் விற்பனை தொடங்கிய சில நிமிடங்களிலேயே விற்றுத் தீர்ந்தன. என்னதான் CSK தொடர் தோல்விகளை சந்தித்து வந்தாலும் நிச்சயம் அதில் இருந்து மீண்டு வரும் என ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். நீங்க டிக்கெட் வாங்க ரெடியா?
News April 7, 2025
TVH குழுமத்திற்கு சொந்தமான இடங்களில் ED ரெய்டு

சென்னையில் TVH கட்டுமான நிறுவனத்திற்கு சொந்தமான இடங்களில் அமலாக்கத்துறை (ED) அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். எம்.ஆர்.சி.நகர், அடையாறு, பெசன்ட் நகர் உள்ளிட்ட 5 இடங்களில் அதிகாலை முதலே இந்த சோதனையானது நடைபெற்று வருகிறது. எந்த வழக்கின் அடிப்படையில் இந்த சோதனையானது நடைபெற்று வருகிறது என்பது குறித்த தகவல் இன்னும் வெளியாகவில்லை.