News April 5, 2025
உலக வரலாற்றில் இடம் பிடித்த தஞ்சாவூர் பீரங்கி

தஞ்சையில் சுற்றுலா வரும் பயணிகள் பார்க்கவேண்டியவற்றில் முக்கிமானது, இந்த 400 ஆண்டுகள் பழமையான பீரங்கி ஆகும். வெள்ளை பிள்ளையார் கோயில் அருகில், காணப்படும் இந்த பீரங்கி உள்ள இடத்தை பீரங்கி மேடு என்றழைக்கின்றனர். ‘ராஜகோபால பீரங்கி’ என்று பிரபலமாக அறியப்படும் இப்பீரங்கி, ரகுநாத நாயக்கரின் ஆட்சிகாலத்தில், 1620ஆம் ஆண்டு வார்க்கப்பட்ட இது, உலகின் மிகப்பெரிய ஃபோர்ஜ் வெல்டிங் இரும்பு பீரங்கியில் ஒன்றாகும்.
Similar News
News April 8, 2025
உலகம் வியக்கும் தஞ்சாவூர் பொருட்கள்

தமிழ்நாட்டில் புவிசார் குறியீடு பெற்ற 62 பொருட்களில், 10 பொருட்கள் தஞ்சை மாவட்டத்தைச் சேர்ந்தவையாகும் அவை: 1. தஞ்சாவூர் தலையாட்டி பொம்மை 2. தஞ்சாவூர் ஓவியம் 3. சுவாமிமலை வெங்கல சிலை 4. நாச்சியார்கோவில் விளக்கு 5. தஞ்சாவூர் வீணை 6. தஞ்சாவூர் கலைத்தட்டு 7. கருப்பூர் கலம்காரி ஓவியங்கள் 8. தஞ்சாவூர் நெட்டி வேலைப்பாடு 9. கும்பகோணம் வெற்றிலை 10. நரசிங்கம்பேட்டை நாதஸ்வரம் ஆகியவை ஆகும். ஷேர் பண்ணுங்க
News April 8, 2025
தஞ்சை அருகே வேலை வாய்ப்பு

திருச்சியில் உள்ள தனியார் நிறுவனத்தில் (Digital Marketing Manager) உள்ள காலி பணியிடங்களை நிரப்ப தமிழ்நாடு வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை வாயிலாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு ஊதியமாக ரூ.25,000 வரை வழங்கப்படுகிறது.12ஆம் வகுப்பு முடித்துவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். விருப்பமுள்ளவர்கள் <
News April 8, 2025
தமிழில் பெயர் பலகை வைக்க கால அவகாசம் அறிவிப்பு

தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து நிறுவனங்களிலும் தமிழில் பெயர் பலகை வைக்க (மே.15) வரை கால அவகாசம் வழங்கப்படுகிறது என மாவட்ட ஆட்சித்தலைவர் பா. பிரியங்கா பங்கஜம் தெரிவித்துள்ளார். எனவே, அனைத்து கடைகள், வணிகர் சங்கங்கள், உணவு நிறுவனங்கள், பள்ளிகள், கல்லூரிகளில் தமிழில் பெயர் பலகை அமைக்க வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் பா. பிரியங்கா பங்கஜம் தெரிவித்துள்ளார்.