News April 5, 2025

வாழ்வை பாசிட்டிவ் ஆக்கும் விகிர்தீஸ்வரர்!

image

வாழ்வில் பல்வேறு மன அழுத்தம், வெறுமை, சலிப்பு உள்ளவர்களின் எண்ணங்களை முன்னேற்றத்தை நோக்கி நகர்த்தும் கடவுளாக நம்பப்படுபவர் கரூர் மாவட்டத்தில் உள்ள விகிர்தீஸ்வரர். விகிர்தீஸ்வரர் என்றாலே நன்மை தருபவர் என்று அர்த்தம். இந்தக் கோயிலில் இவரை தரிசித்து விட்டுதிரும்பும் போது கூட படி ஏறி தான் செல்ல வேண்டும். அந்த தருணம் முதலே தரிசித்தவர் வாழ்க்கைப் படியும் ஏறுமாம். நண்பர்களுக்கு SHARE பண்ணுங்க!

Similar News

News December 18, 2025

கரூரில் அலப்பறை செய்தவர் மீது பாய்ந்த வழக்கு!

image

கரூர் மாவட்டம் தோகைமலை அருகே, கழுகூர் பேருந்து நிறுத்த பகுதியில் நேற்று இரவு சின்னதுரை என்பவர் மது போதையில் பொதுமக்கள் மத்தியில் அலப்பறை செய்த்தாக கூறப்படுகிறது. இது குறித்து அங்கிருந்த பொதுமக்கள் தோகைமலை போலீசாருக்கு தகவல் அளித்தனர். அதன் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் சின்னதுரையை மடக்கி பிடித்து அவர் மீது வழக்கு பதிவு செய்து இது போன்ற தவறுகள் செய்யக்கூடாது என எச்சரித்தனர்.

News December 18, 2025

கரூர் மாணவிகளை போட்டோ எடுத்த வடமாநில நபர் கைது!

image

கரூர் மாவட்டம், புகலூர் வட்டம், நஞ்சை புகலூர் தவிட்டுப்பாளையம் பகுதியில் தேசிய நெடுஞ்சாலையில் பேருந்து நிறுத்தத்தில் தினசரி பள்ளிக்குச் செல்லும் மாணவிகளை வட மாநிலத்தவர் ஒருவர் தினசரி புகைப்படம் எடுத்து வந்துள்ளார். இதனை கண்ட பொதுமக்களே வட மாநிலத்தவரை பிடித்து வேலாயுதம்பாளையம் காவல்துறையிடம் ஒப்படைத்து உள்ளனர். இது குறித்து போலீஸ் விசாரணை செய்கின்றனர்.

News December 18, 2025

கரூர்: ஆட்சியர் முக்கிய அறிவிப்பு

image

கரூர் மாவட்டத்தில் வாழும், பெண்கள் முன்னேற்றத்திற்குச் சிறந்த சேவை புரிந்த மகளிருக்கு, 2026 ஆம் ஆண்டு சர்வதேச மகளிர் தின விழாவின் போது, மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்களால் ஒவ்வொரு ஆண்டும் ஔவையார் விருது வழங்கப்படுகிறது. மேலும் விபரங்களுக்கு மாவட்ட சமூகநல அலுவலக தொலைபேசி 9384980066 என்ற எண்ணை தொடர்பு கொண்டு பயன்பெறுமாறு கரூர் மாவட்ட ஆட்சியர் தங்கவேல் அறிவித்துள்ளார்.

error: Content is protected !!