News April 5, 2025

திருவள்ளூரில் பறந்த அதிரடி உத்தரவு

image

திருவள்ளூர் மாவட்டத்தின் கடைகள், வணிக மற்றும் தொழில் நிறுவனங்களில், மே 1ம் தேதிக்குள் தமிழில் பெயர் பலகை அமைக்க வேண்டும் என கலெக்டர் பிரதாப் அறிவித்துள்ளார். முதன்மையாக தமிழ், இரண்டாவது ஆங்கிலம், தேவையானால் மூன்றாவது மொழியில் எழுதலாம். மறுப்பவர்களுக்கு 1947-ன் சட்ட விதியின் கீழ் அபராதம் விதிக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார். *கடை வைத்திருக்கும் நண்பர்களுக்கும், தமிழ் ஆர்வலர்களுக்கும் பகிரவும்*

Similar News

News April 8, 2025

வணிக நிறுவனங்கள், கடைகளில் தமிழில் பெயர் பலகை

image

திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து வணிக, தொழில் நிறுவனங்கள், மருத்துவமனைகள், பள்ளிகள் உள்ளிட்ட இடங்களில், முதன்மையான மொழியான தமிழில் பெயர் பலகை அமைக்க வேண்டும். வரும் மே 1ஆம் தேதிக்குள் இந்த இதனை செய்ய வேண்டுமென அரசு உத்தரவிட்டுள்ளது. ஆட்சியர் மு. பிரதாப் அறிவித்ததின்படி, தவறினால் தமிழ்நாடு கடைகள் மற்றும் நிறுவனங்கள் சட்டத்தின் கீழ் அபராதம் விதிக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் பிரதாப் கூறினார்.

News April 8, 2025

திருத்தணி அருகே லாரி – பேருந்து மோதி விபத்து: 11 பேர் காயம்

image

திருத்தணியில் இருந்து கிறிஸ்துவ கூட்டத்திற்கு, கல்லூரி பேருந்தில் 60 பேர் சென்றுள்ளனர். கூட்டத்திற்கு சென்றுவிட்டு திரும்பும்போது, சென்னை – திருப்பதி நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த டிப்பர் லாரியின் பின்னால் மோதி விபத்துக்குள்ளானது. பேருந்தில் பயணித்த 11 பேர் காயமடைந்தனர். 10 பெண்கள் மற்றும் 1 ஆண் உட்பட 11 பேரும் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

News April 8, 2025

ரூ.2.50 லட்சம் திருமண உதவித்தொகை

image

சாதி மறுப்புத் திருமணம் செய்பவர்களுக்கு அம்பேத்கர் கலப்பு திருமண உதவித் திட்டத்தின் கீழ் ரூ.2.50 லட்சம் நிதியுதவி வழங்கப்படுகிறது. இத்திட்டத்தில் பயன்பெற, தம்பதியில் ஒருவர் SC/ST வகுப்பைச் சேர்ந்தவராகவும், மற்றொருவர் BC/MBC வகுப்பைச் சேர்ந்தவராகவும் இருக்க வேண்டும். தம்பதிகளின் ஆண்டு வருமானம் ரூ.5 லட்சத்துக்கு குறைவாக இருக்க வேண்டும். <>ambedkarfoundation<<>> என்ற இணையத்தில் விண்ணப்பிக்கலாம்.

error: Content is protected !!