News April 5, 2025
வேலூர் மாவட்ட ஆட்சியர் அதிரடி உத்தரவு

வேலூர் மாநகராட்சி முதலாவது மண்டலத்தில் நடைபெற்று வரும் குடிநீர், சாலை, கழிவுநீர் கால்வாய், புதை சாக்கடை திட்டப் பணிகள் தொடர்பான ஆய்வுக்கூட்டம் முதலாவது மண்டல அலுவலக கூட்டரங்கில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. அப்போது ஆட்சியர் மாவட்டத்தில் நடைபெற்று வரும் புதை சாக்கடை, சாலைப் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என்று மாநகராட்சி அதிகாரிகளுக்கு வேலூர் மாவட்ட ஆட்சியா் வி.ஆா்.சுப்புலட்சுமி உத்தரவிட்டுள்ளாா்.
Similar News
News April 7, 2025
வேலூர் இரவு ரோந்து பணி போலீசார் விவரம் வெளியீடு

வேலூர் மாவட்டத்தில் இரவு நேரங்களில் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில், காவல் துறை சார்பில் (06.04.2025) இன்று இரவு 9 மணி முதல் காலை 5 மணி வரை இரவு ரோந்து பணிக்கு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். ரோந்து 1 முதல் 5 வரை மொத்தமாக 5 போலீஸ் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு குழுவுக்கும் ஓர் உதவி ஆய்வாளர் தலைமையிலான போலீசார் பொறுப்பாக உள்ளனர்.
News April 6, 2025
வேலூர்: முன் ஜென்ம பாவங்கள் நீங்க செல்ல வேண்டிய கோவில்

வேலூர் விண்ணம்பள்ளி பழமையான அகத்தீஸ்வரர் கோயிலில் சிவலிங்கம் மீது சூரியஒளி விழும் நிகழ்வு பங்குனி மாதம் 23ம் தேதி முதல் சித்திரை 1 வரை நடைபெறும். இந்த ஆண்டும் வரும் ஏப். 14-ஆம் தேதி வரை இந்நிகழ்வு நடைபெற உள்ளது. சிவனை சூரியன் வழிபடும் காட்சியை கண்டால் முன்ஜெனம பாவங்கள் நீங்கும் என்பது நம்பிக்கை. அதனாலேயே ஏராளமான பகதர்கள் வருகை தந்து வழிபட்டு செல்கின்றனர். ஷேர் பண்ணுங்க
News April 6, 2025
வேலூரில் தமிழில் பெயர் வைக்க ஆட்சியர் உத்தரவு

வேலூர்ஆட்சியர் அறிப்பு வெளியிட்டுள்ளார். அதில், “மாவட்டத்தில் உள்ள கடைகள், ஹோட்டல்கள், வணிக நிறுவனங்கள், அனைத்து வகையான தொழிற்சாலைகள் மற்றும் தனியார் பள்ளிகள், கல்லூரிகளில் வருகிற மே 15-ம் தேதிக்குள் தமிழில் பெயர் பலகை வைக்க வேண்டும்; தமிழ், ஆங்கிலம் மற்றும் தேவைபட்டால் பிற மொழிகளிலும் எழுதி கொள்ளாலாம்” என குறிப்பிட்டுள்ளார். *உங்களுக்கு தெரிந்த கடை வைத்திருப்போர்& தமிழ் ஆர்வலர்களுக்கு பகிரவும்*