News April 5, 2025

மைதானத்தில் ‘தல’ தோனியின் பெற்றோர்

image

தோனி இன்றோடு ஓய்வு பெறவிருப்பதாக தகவல் வெளியாகும் சூழலில் அவரது பெற்றோர் சென்னை சேப்பாக்கம் மைதானத்திற்கு வருகை தந்துள்ளனர். இதனால், CSK மற்றும் தோனியின் ரசிகர்கள், அவர் உண்மையில் ஓய்வு பெறுகிறாரோ என்ற கலக்கத்தில் உள்ளனர். முன்னதாக ஒருமுறை, தான் சென்னை மைதானத்தில்தான் ஓய்வை அறிவிப்பேன் என்று அவர் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

Similar News

News April 7, 2025

20 முறை திருமணமாகியும் கன்னியாகவே இருக்கும் பெண்!

image

குழப்பமாக இருக்கிறதா? தன்னை ’லைப் ஆக்ட்ரஸ்’ எனக் கூறும், சீனாவின் Cao Mei, திருமணம் செய்வதை ஒரு பிசினஸாக்கி இருக்கிறார். திடீரென திருமணம் நிற்கிறது. வேறொரு பெண்ணை ரெடி பண்ணி, மானத்தை காப்பாத்திக்கணும் என்றால், இவரைத் தொடர்பு கொண்டால் போதும். மணப்பெண்ணாக வந்து, போஸ் கொடுத்துவிட்டு சென்று விடுவார். ஆனால், அவர் தொடுவதை அனுமதிப்பதில்லை. இதற்காக, அவர் 1,500 யுவான் (₹18,000) பில்லும் போடுகிறார்.

News April 7, 2025

தினம் ஒரு திருக்குறள்

image

▶குறள் பால்: அறத்துப்பால் ▶குறள் இயல்: இல்லறவியல் ▶அதிகாரம்: ஈகை ▶குறள் எண்: 229 ▶குறள்: இரத்தலின் இன்னாது மன்ற நிரப்பிய
தாமே தமியர் உணல். ▶பொருள்: பிறர்க்கு ஈ.வதால் குறையக் கூடுமென்று, குவித்து வைத்துள்ளதைத் தாமே உண்ணுவது என்பது கையேந்தி இரந்து நிற்பதைக் காட்டிலும் கொடுமையானது.

News April 7, 2025

ஆண் குழந்தைக்கு அப்பா ஆனார் பாடலாசிரியர் விவேக்!

image

சினிமா பாடலாசிரியர் விவேக் – சாரதா தம்பதிக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது. அவர்களுக்கு சினிமா பிரபலங்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். 2015-ம் ஆண்டு திருமணம் செய்த அவர், 10-வது ஆண்டு திருமண நாளையொட்டி குழந்தை பிறந்திருப்பதை சோஷியல் மீடியாவில் பதிவிட்டுள்ளார். எனக்குள் ஒருவன் திரைப்படம் மூலம் பாடலாசிரியராக அறிமுகமான அவர், ‘ஆளப்போறான் தமிழன்’ உள்ளிட்ட பல ஹிட் பாடல்களை எழுதியுள்ளார்.

error: Content is protected !!