News April 5, 2025
JDU-இல் இருந்து 5 தலைவர்கள் விலகல்

வக்பு வாரிய மசோதாவுக்கு ஆதரவளித்ததால் அதிருப்தியடைந்து, JDU-வில் இருந்து 5 மூத்த தலைவர்கள் விலகியுள்ளனர். JDU-ன் பீகார் மாநில பொதுச் செயலாளர் முகமது சித்திகி, சிறுபான்மை பிரிவு செயலாளர் ஷாநவாஸ் மாலிக் உள்ளிட்ட 4 பேர் ஏற்கெனவே விலகினர். இந்நிலையில், இளைஞரணி துணைத் தலைவர் தப்ரீஸ் ஹாசனும் விலகியுள்ளார். அடுத்தடுத்து தலைவர்கள் விலகுவது JDU தலைவர் நிதிஷ்குமாருக்கு நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.
Similar News
News October 16, 2025
FLASH: விலை மளமளவென குறைகிறது

விண்ணை முட்டும் அளவுக்கு உயர்ந்துவரும் வெள்ளியின் விலை, சீக்கிரமே சரிவை சந்திக்குமாம். கடந்த தீபாவளியில் 1 கிலோ ₹1.1 லட்சமாக இருந்த நிலையில், ஒரே ஆண்டில் விலை டபுளாகியுள்ளது. இந்நிலையில், தீபாவளிக்கு பிறகு வெள்ளி விலை குறையும் என நிபுணர்கள் கணித்துள்ளனர். விநியோகம் அதிகரிப்பது, முதலீட்டாளர்கள் மாற்றுவழியில் கவனம் செலுத்துவது உள்ளிட்டவை விலை சரிவுக்கு காரணமாக அமையும் என அவர்கள் கூறுகின்றனர்.
News October 16, 2025
ரஷ்ய எண்ணெய், இந்தியாவுக்கு பெரும் பலன்: ரஷ்ய தூதர்

ரஷ்யாவிடம் எண்ணெய் வாங்குவது இந்திய மக்கள் மற்றும் அவர்களின் பொருளாதாரத்திற்கு பெரும் பலனளிப்பதாக, இந்தியாவுக்கான ரஷ்ய தூதர் டெனிஸ் அலிபோவ் தெரிவித்துள்ளார். டிரம்ப்பின் கருத்துக்கு பதில் அளித்துள்ள ரஷ்ய தூதர் அலிபோவ், அமெரிக்கா மற்றும் இந்தியாவுக்கு சுதந்திரமாக முடிவெடுக்க உரிமை உண்டு எனவும், அவர்களின் முடிவுகளில் ரஷ்யா தலையிடாது என்றும் திட்டவட்டமாக கூறியுள்ளார்.
News October 16, 2025
TTF வாசனுக்கு திருமணம்❤️❤️ மனைவி இவர்தான்.. PHOTO

யூடியூபரும் நடிகருமான TTF வாசன், கடந்த செப்டம்பரில் தனது மாமா மகளை திருமணம் செய்ததாக அறிவித்தார். இதுதொடர்பாக அவர் போட்டோஸ், வீடியோக்களை வெளியிட்டாலும், அதில் மணப்பெண்ணின் முகம் எமோஜிகளால் மறைத்த படியே இருந்தது. இந்நிலையில், முதல்முறையாக தனது காதல் மனைவியின் முகத்தை Reveal செய்துள்ளார் வாசன். இந்த ஜோடியை பார்த்த நெட்டிசன்கள், லைக்ஸ் போட்டு வாழ்த்து மழையை பொழிந்து வருகின்றனர்.