News April 5, 2025
தங்கம் விலை பாதியாக குறையுமா?

தங்கம் விலை கடந்த 2 நாள்களாக சரிந்து வரும் நிலையில், பாதியாக குறையும் என பலரும் சோஷியல் மீடியாவில் கருத்து கூறி வருகின்றனர். இது தொடர்பாக பொருளாதார வல்லுநர்களிடம் கேட்டபோது, உலக அளவில் முதலீட்டுக்காக தங்கம் வாங்குவது குறைந்தது மற்றும் டிரம்பின் புதிய வரி விதிப்பே காரணம் என்றனர். மேலும், ஒரு சில நாள்களுக்கு இந்த நிலை நீடிக்கும் ஆனால், பாதியாகக் குறைய வாய்ப்பில்லை எனக் கூறியுள்ளனர்.
Similar News
News September 1, 2025
சற்றுமுன்: பிரபல இயக்குநர் காலமானார்

கன்னட திரையுலகில் பிரபல இயக்குநர் SS டேவிட்(55) திடீர் மாரடைப்பால் காலமானார். பெங்களூருவில் ஒரு மருந்து கடையில் நின்றிருந்த அவர், திடீரென மயக்கமடைந்து சரிந்தார். உடனடியாக ஹாஸ்பிடல் அழைத்து சென்றும் அவரைக் காப்பாற்ற முடியவில்லை. கன்னட திரையுலகில் இயக்குநராகவும் கதாசிரியராகவும் ஜொலித்த இவர் இயக்கிய படங்களில் ஹாய் பெங்களூர், தைரியா, ஜெய் ஹிந்த் ஆகியவை முக்கியமானவை. RIP
News September 1, 2025
ரேஷன் கார்டு விஷயத்தில் இப்படி மட்டும் செய்யாதீங்க..!

புதிதாக ரேஷன் கார்டுக்கு விண்ணப்பிப்பவர்கள் தவறான முகவரி கொடுப்பது, குடும்ப உறுப்பினர்கள் குறித்து தவறான விவரங்கள் கொடுப்பது. கேஸ் சிலிண்டர் இருப்பதை மறைத்தல் உள்ளிட்டவற்றை தவிர்க்கவும். அவ்வாறு செய்தால், 1955 அத்தியாவசிய பண்ட சட்டத்தின்படி தண்டனைக்குரிய குற்றம். இதனை மீறினால் விண்ணப்பம் நிராகரிக்கப்பட வாய்ப்புள்ளது. சட்ட நடவடிக்கையும் எடுக்கப்படலாம். அதனால், கவனமாய் விண்ணப்பியுங்கள்!
News September 1, 2025
BREAKING: அதிமுகவில் இருந்து செங்கோட்டையன் விலகல்?

அதிமுக மூத்த தலைவர் செங்கோட்டையன் மீண்டும் அதிருப்தியில் இருப்பதாக செய்தி வெளியாகியுள்ளது. ஏற்கெனவே EPS மீது அதிருப்தியில் இருந்த அவரை, தங்கமணி, வேலுமணி உள்ளிட்ட மூத்த தலைவர்கள் சமாதானம் செய்தனர். இந்நிலையில், அவர் தனது முடிவு குறித்து செப்.5-ம் தேதி கோபிச்செட்டிபாளையத்தில் பேசவிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதற்குள் சமாதானப் புறா பறக்குமா?