News April 5, 2025
ஐஸ்கிரீமில் சோப்பு தூள் கலப்பு.. எச்சரிக்கை

கோடை வெயில் தொடங்கி விட்டதால், ஐஸ்கிரீம், குளிர்பானங்களை மக்கள் அதிகளவில் விரும்புகின்றனர். இந்நிலையில், பெங்களூருவில் ‘கிரீம்’ உருவாக்க துணிகளுக்கான சலவை சோப்பு தூளும், குளிர்பானங்களில் நுரையை அதிகரிக்க ‘பாஸ்போரிக்’ அமிலமும், சர்க்கரைக்கு பதிலாக சுவை & நிறத்தை மேம்படுத்த சாக்ரினும் பயன்படுத்தப்பட்டது கண்டறியப்பட்டுள்ளது. இதை உட்கொள்பவர்களுக்கு பல உடல்நலப் பிரச்னைகள் ஏற்படுவதாக கூறப்படுகிறது.
Similar News
News April 7, 2025
கல்லறையில் உடலுறவு… கம்பி எண்ணும் காதல் பறவைகள்!

அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் 175 ஆண்டுகள் பழமை வாய்ந்த கல்லறையில் உடலுறவில் ஈடுபட்ட ஜோடி கைது செய்யப்பட்டுள்ளனர். வரலாற்று சிறப்புமிக்க பகுதிக்குள் அத்துமீறி நுழைந்த அவர்கள், உடலுறவில் ஈடுபட்டபோது அங்குவந்த போலீசிடம் சிக்கியுள்ளனர். மேலும், அவர்கள் வந்த காரில் இருந்து போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதுதொடர்பாக போலீஸ் விசாரித்து வருகிறது.
News April 6, 2025
மீண்டும் தலைவர் ஆகும் அண்ணாமலை?

அண்ணாமலையே மீண்டும் மாநிலத் தலைவர் ஆவார் என பாஜகவின் மாநிலத் துணைத் தலைவர் வி.பி.துரைசாமி பேசியுள்ளார். பாஜகவின் புதிய தலைவரை மேலிடம் தேடி வரும் நிலையில், EPS-ம் அவரை மாற்ற அழுத்தம் கொடுப்பதாகத் தகவல் வெளியாகி வருகிறது. இந்நிலையில், மீண்டும் அண்ணாமலைதான் தலைவர் ஆவார் என்று வி.பி.துரைசாமி பேசியிருக்கிறார். இதுகுறித்து உங்களது கருத்து என்ன?
News April 6, 2025
விடிய விடிய மழை கொட்டும்

இன்றிரவு நாமக்கல், கரூர், திருச்சி, திண்டுக்கல், மதுரை & பெரம்பலூர் ஆகிய மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும் என்று MET கணித்துள்ளது. மேலும், நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், ஈரோடு, சேலம், தேனி, விருதுநகர், சிவகங்கை, புதுக்கோட்டை & ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளதாகக் கணிக்கப்பட்டுள்ளது.