News April 5, 2025

வேலையில்லா இளைஞர்களுக்கு நற்செய்தி  

image

மயிலாடுதுறை மாவட்ட வேலைவாய்ப்பு தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் பதிவுசெய்துள்ள வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கான உதவித்தொகை வழங்கும் திட்டத்தின் கீழ் பயன்பெற தகுதியுடையவர்கள் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் ஹெச்.எஸ்.ஸ்ரீகாந்த் தெரிவித்துள்ளார். மேலும், https://tnvelaivaaippu.gov.in/download.html என்ற இணையதள பக்கத்திலும், 04364-299790 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு ஆலோசனை பெறலாம் என கூறியுள்ளார்.

Similar News

News April 6, 2025

மயிலாடுதுறை: அனைத்தும் அருளும் அமிர்தகடேஸ்வரர்

image

மயிலாடுதுறை, திருக்கடையூரில் அருள்மிகு அமிர்தகடேஸ்வரர் ஆலயம் அமைந்துள்ளது. இங்கு சென்று மூலவரான அமீர்தகடேஸ்வரரை வணங்குவோர்க்கு உடல் நலம் பெற்று, எமபயம் விலகி வாழ்வில் துயரம் நீங்கி மனஅமைதி கிடைக்கும். மேலும் வேலை வாய்ப்பு, தொழில் விருத்தி, பதவி உயர்வு என வாழ்வின் சகலமும் கைகூடும் என்பது ஐதீகம். உங்கள் நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு SHARE செய்யுங்கள்.

News April 6, 2025

மயிலாடுதுறை மாவட்ட காவல்துறை எச்சரிக்கை

image

மயிலாடுதுறையில் பொதுமக்களுக்கு மாவட்ட காவல்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இதில், `இணையதளங்களில் உங்களுக்கு பரிசு பொருள் கிடைத்திருக்கிறது, பணம் செலுத்தி பெற்றுக் கொள்ளுங்கள் என போலியாக வரும் மோசடிக்காரர்கள் சித்தரிக்கும் பரிசு வலையில்` பொதுமக்கள் விழ வேண்டாமென கூறியுள்ளனர். மேலும், சைபர் குற்றங்கள் குறித்து 1930 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு புகார் தெரிவிக்கலாம் என அறிவுறுத்தி உள்ளனர்.

News April 6, 2025

மயிலாடுதுறை விவசாயிகளுக்கு நற்செய்தி 

image

மயிலாடுதுறை மாவட்ட விவசாயிகள் விளைப் பொருட்களை ஆன்லைனில் விற்பனை செய்ய ஆதார் எண், பேங்க் புக் ஜெராக்ஸ் ஆகியவற்றுடன் மின்னணு வேளாண் சந்தை திட்டத்தில் இணைந்து சீர்காழி (9080427055), செம்பனார்கோவில் (9943917494),  மாணிக்கப்பங்கு (9843448803) ஆகிய பகுதியை அதிகாரிகளை தொடர்பு கொண்டு விற்பனைக் கூடத்தில் விற்பனை செய்து அதிக லாபம் பெறலாம் என மாவட்ட ஆட்சியர் தகவல் தெரிவித்துள்ளார். (SHARE பண்ணுங்க) 

error: Content is protected !!