News April 5, 2025

கிறிஸ்தவர்களை குறிவைக்கும் RSS : ராகுல் குற்றச்சாட்டு

image

இஸ்லாமியர்களுக்கு எதிரான வக்ஃப் மசோதா, எதிர்காலத்தில் பிற பிரிவினரை குறிவைக்க முன்மாதிரியாக உள்ளது என்று மக்களவையில் ராகுல் குற்றம் சாட்டியுள்ளார். RSS-ன் கவனம், கிறிஸ்தவர்கள் மீது திரும்ப நீண்ட நேரம் ஆகாது; பாஜக அரசின் தாக்குதலில் இருந்து மக்களை பாதுகாக்கும் ஒரே கேடயம் அரசியலமைப்புச் சட்டம்தான். இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை பாதுகாப்பது நம் அனைவரின் கூட்டுப் பொறுப்பு என்றும் தெரிவித்துள்ளார்.

Similar News

News December 20, 2025

தவாகவில் இணையவுள்ளாரா காளியம்மாள்?

image

நாதகவிலிருந்து விலகிய காளியம்மாள் திமுக, தவெகவிடம் பேச்சுவார்த்தை நடத்துகிறார் என பல தகவல்கள் வந்தன. ஆனால் தற்போது புதுத் தகவலாக, அவர் தமிழக வாழ்வுரிமை கட்சியில் இணைய ஆலோசனை நடத்திவருவதாக கூறப்படுகிறது. இதனால்தான் வேல்முருகனுக்காக சென்னையில் நடந்த விழாவில் அவர் கலந்துகொண்டார் எனவும் அரசியல் விமர்சகர்கள் சொல்கின்றனர். காளியம்மாள் தவாகவில் இணைவாரா? உங்கள் யூகம் என்ன?

News December 20, 2025

இதனால் தான் கில்லை தேர்வு செய்யவில்லை: அகர்கர்

image

<<18621772>>டி20 WC-க்கான<<>> IND அணியில் கில் இடம்பெறாதது குறித்து அஜித் அகர்கர் விளக்கம் அளித்துள்ளார். சமீபத்திய போட்டிகளில் கில் சொதப்பியதால், அவரது திறனை குறைத்து மதிப்பிட முடியாது, தற்போதைய அணி தேர்வு என்பது team combination-ஐ கருத்தில் கொண்டு முடிவு செய்யப்பட்டது என அவர் தெரிவித்துள்ளார். அதேபோல், கில் தேர்வு செய்யப்படாததற்கு அவரது ஃபார்ம் காரணம் இல்லை என்று கேப்டன் SKY-யும் விளக்கம் அளித்துள்ளார்.

News December 20, 2025

BREAKING: அதிமுகவில் இருந்து கூண்டோடு நீக்கம்

image

ராமநாதபுரம் மாவட்ட அதிமுக நிர்வாகிகள் 4 பேரை கட்சியில் இருந்து EPS நீக்கியுள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கட்சியின் கொள்கை- குறிக்கோள்களுக்கு எதிராக செயல்பட்டதாகக் கூறி மாவட்ட அளவிலான நிர்வாகிகள் சீமான் மரைக்காயர், சீனி காதர்மொய்தீன், பக்கர், ஹமீது அப்துல்ரகுமான் மரைக்காயர் ஆகியோரை கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்பட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!