News April 5, 2025

மதுரை மக்களே உஷார்: பொது சுகாதாரத்துறை எச்சரிக்கை

image

மாநிலத்தின் பல பகுதியில் தக்காளிக்காய்ச்சல் அதிகரித்து வரும் நிலையில், இது தோலில் சிவப்பு நிற அரிப்பு ஏற்படுத்தும் மற்றும் பரவும் அபாயம் உள்ள நோயாகும். தங்கிய நீர், அசுத்தமான சூழல் போன்றவை இதன் முக்கிய காரணங்கள் என்பதால், பொதுசுகாதார நிபுணர்கள் மக்கள் கவனமாக இருக்குமாறு அறிவுறுத்தியுள்ளனர். காய்ச்சல், அரிப்பு போன்ற அறிகுறிகள் தென்பட்டால் உடனே மருத்துவமனை சென்று பரிசோதனை செய்து கொள்ள வேண்டும்.

Similar News

News April 12, 2025

மதுரையில் இலவச கணினி பயிற்சி

image

மத்திய, மாநில அரசு நிதியுதவியின் கீழ் மதுரை எஸ்.எஸ்.காலனி பெட் கிராட் நிறுவனத்தில் ஏப்.15 முதல் ஒருமாத கம்ப்யூட்டர் மற்றும் இலவச டெலிகாலிங் பயிற்சி அளிக்கப்படுகிறது. ஆங்கிலப் பேச்சுப்பயிற்சி, MS WORD, EXCEL,  போட்டோஷாப், கோரல் டிரா பயிற்சிக்கு பிளஸ் 2 முடித்த 35 வயதுக்குட்பட்ட ஆண், பெண் பங்கேற்கலாம். ஊக்கத் தொகை, மத்திய அரசின் சான்றிதழ் உண்டு. 93452 02324 எண்ணில் அழைக்கவும். SHARE செய்து உதவவும்.

News April 12, 2025

மதுரையில் 448 சமையல் உதவியாளர் பணி

image

மதுரை மாவட்ட பள்ளிகளில் செயல்படும் சத்துணவு மையங்களில் காலியாக உள்ள 448 சமையல் உதவியாளர் பணியிடங்களில் நேரடி நியமனம் செய்யப்பட உள்ளன. தேர்வான ஓராண்டுக்கு தொகுப்பூதியமும், அதன் பின்பு சிறப்பு காலமுறை ஊதியமும் வழங்கப்படும். 10-ம் வகுப்பு தோல்வி, தேர்ச்சி பெற்ற 18- 40 வயதுள்ளவர்கள் வரும் ஏப். 29க்குள் சம்பந்தப்பட்ட ஒன்றியம், நகராட்சி, மாநகராட்சி அலுவலகங்களில் விண்ணப்பிக்க வேண்டும்.*SHARE பண்ணவும்*

News April 12, 2025

மதுரை அருகே லாரி கவிழ்ந்து ஒருவர் பலி

image

செக்கானுாரணி பகுதியை சேர்ந்தவர் கிருஷ்ணன் 24, லாரி டிரைவர். இவர் நேற்று திண்டுக்கல் மதுரை 4 வழிச்சாலையில் டிப்பர் லாரியில் கற்கள் ஏற்றி வந்தார்.குலசேகரன்கோட்டை ஆஞ்சநேயா கோயில் அருகே வந்தபோது முன்பக்க லாரி டயர் வெடித்தது.லாரி டிரைவர் கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்தது. இதில் கிருஷ்ணன் இறந்தார்.போலீசார் விசாரிக்கின்றனர். டிரைவர்களுக்கு SHARE செய்து தினமும் லாரி எடுக்கும் முன் டயரை செக் பண்ண சொல்லுங்க.

error: Content is protected !!