News April 5, 2025

கோவைக்கு மழை எச்சரிக்கை

image

தமிழகத்தில் 7 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அந்தவகையில், கோவை, திருப்பூர், ஈரோடு, திண்டுக்கல், நீலகிரி, தென்காசி மாவட்டத்தில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மக்களே, மழை பெய்ய வாய்ப்புள்ளதால் குடை கொண்டு போங்க. உங்க உறவினர்களுக்கு SHARE பண்ணுங்க.

Similar News

News November 11, 2025

கோவை: தூக்கிட்டு தற்கொலை

image

கோவை சரவணம்பட்டி பகுதியை சேர்ந்தவர் கார்த்திக் (36). இவர் கடந்த சில நாட்களாகவே வேலை இல்லாமல் இருந்து வந்துள்ளார். இதனால் மன உளைச்சலில் இருந்து வந்துள்ளார். இந்த நிலையில் நேற்று முந்தினம் வாழ்க்கையில் விரக்தி அடைந்து வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். பின்னர் இது குறித்து சரவணம்பட்டி காவல்துறையினர், வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

News November 11, 2025

குண்டு வெடிப்பு: கோவையில் அலர்ட்

image

டெல்லி கார் குண்டு வெடிப்பு சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த குண்டு வெடிப்பு சம்பவத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 13ஆக உயர்ந்துள்ளது. இச்சம்பவம் எதிரொலியாக கோவை ரயில் நிலையத்தில் ஆர்.பி.எப், வெடிகுண்டு தடுப்பு பரிவு போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர். மேலும், மக்கள் அதிகம் கூடும் இடங்களிலும் சோதனை (ம) பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

News November 11, 2025

கோவை மதுவிற்பனையில் ஈடுபட்ட 3 பேர் கைது

image

கோவை மாநகர காவல் ஆணையர் சரவண சுந்தர் வெளியிட்ட அறிக்கையில், கோவை மாவட்டத்தில் நேற்று சட்டவிரோதமாக மது விற்பனையில் ஈடுபட்ட பெரியசாமி (20), காளீஸ்வரன் (21), மற்றும் அஜித்குமார் (27) என்பவர்களே கைது செய்த அவர்களிடமிருந்து, 60 மது பாட்டில்களை பறிமுதல் செய்துள்ளனர் என்று தெரிவித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

error: Content is protected !!